Search This Blog

May 12, 2011

பஹ்ரைனில் மக்கள் ஆர்பாட்டங்கள் தொடர்கின்றது



பஹ்ரைன் பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு தீவு கூட்டம் இந்த சிறிய தீவு கூட்டம் 33 தீவுகளை கொண்டுள்ளது இதன் பெரிய தீவு 55 கி.மீ நீளத்தையும் 18 கி.மீ அகலத்தையும் கொண்டுள்ளது இங்கு உள்நாட்டு மக்களை விடவும் வெளிநாட்டு மக்கள் அதிகம் வாழ்கின்றனர் இந்த நாட்டின் மக்கள் தொகை 12 இலட்சத்தி 35 ஆயிரம் என்ற மிகவும் சிறிய மக்கள் தொகையை கொண்டுள்ளது.
ஆனால் மக்கள் தொகையில் 54 வீதமானவர்கள் வெளிநாட்டவர்கள் இதில் இலங்கையர் , இந்தியர் பிலிபைன் போன்ற நாடுகளை சேர்ந்தவர்களை அதிகம்  கொண்டுள்ளது. அதிகம் வெளிநாட்டவர்களை கொண்டுள்ளமையால் முஸ்லிம்களின் வீதம் 81.2 ஆக குறைந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றது கிறிஸ்தவர்கள் 9 வீதமும் ஏனைய மதத்தவர்கள் 9.8 வீதமும் உள்ளனர் இவார்களில் கணிசமான யூதர்களும் , இந்துக்களும் உள்ளனர் இந்தியர்கள் 3 இலட்சம் பேர் அங்கு தொழில் புரிந்து வருகின்றனர் .
முஸ்லிம் மக்கள் தொகையில் ஷியா, சுன்னி ஆகிய முஸ்லிம்கள் உள்ளனர் இவர்கள் முஸ்லிம்கள் என்று மட்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பதியப்படுவதால் ஷியா, சுன்னி ஆகிய முஸ்லிம் வகுப்புகள் பற்றி உத்தியோகபூர்வ தகவல் பஹ்ரையின் நாட்டில் கிடையாது ஆனால் வெளிநாடுகளில் பிரிட்டன் நலன்களை பேணும் அமைப்பான British Foreign and Commonwealth Office  என்ற பிரிட்டன் நலன் பேணும் அமைப்பு சுன்னி முஸ்லிம்கள் 33 வீதம் என்றும் 66 வீதம் ஷியா முஸ்லிம்கள் என்றும் கூறுகின்றது முஸ்லிம் உலகை பிரிக்க மிகவும் அவசியமான கணக்கெடுப்பு என்பதால் அதை செய்து வைத்துள்ளார்கள் என்றுதான் கூறவேண்டும்.
இங்கு யாப்பு கொண்ட மன்னர்  ஹமாத் அரசு ஆட்சி நடைமுறையில் உள்ளது  இவர் மற்ற பெரும்பாலான  அரபு நாட்டு தலைவர்களை  போன்று மேற்கின் நலன் பேணும் மனிதர், இங்கு சுபைர் என்ற தீவில் அமெரிக்காவின் முக்கிய கடற்படை கட்டளை தலைமையகம் ஒன்று 1990 ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கிவருகின்றது ஈரானுக்கு அண்மையில் உள்ள நாடு என்பதால் பெரிதும் முக்கியத்துவம் பெறுகின்றது சவூதியும், கட்டாரும் இதன் வலதும் இடதுமான அயல் நாடுகள் இங்கு பெற்றோலிய வளம் மற்றும் முத்துவளம் என்பன முக்கியமானது.
சுபைர் பகுதியல் ஈரானை இலக்கு வைத்து பாரிய இராணுவ கட்டமைப்புகளை அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் கொண்டுள்ளது. தற்போது சுவூதி மற்றும் துபாயி ஆகிய முஸ்லிம் நாடுகளின் இராணுவத் தலையீடு அமெரிக்காவின் துண்டுதளினால் நடைபெறுவதாக பரவலாக விமர்சிக்கப்டுகின்றது இந்த இராணுவ நுழைவை அமெரிக்கா ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது மேற்கின் நலன் பேணும் அரசாங்கங்களான சவூதியும் , துபாயும் லிபியாவுக்கு தமது படைகளை அனுப்பி அங்கு கடாபியால் கொல்லப்படும் மக்களை பாதுகாப்பதற்கு முடியாது உள்ளது என்று கூறப்படும்போது மேற்கு நலன் பேணும் தமது சகாவை பாதுகாக்க பஹ்ரைனுக்கு இராணுவத்தை அனுப்பியுள்ளது என்று ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பு விமர்சித்துள்ளது.
ஹிஸ்புத் தஹ்ரீர் லிபியா மக்களை பாதுகாக்க முஸ்லிம் நாடுகளான சவூதியும் , எகிப்தும் தமது இராணுவத்தை லிபியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிவருகின்றது தற்போது அரபு முஸ்லிம் நாடுகளின் மத்திலும் நாடுகளுக்கு உள்ளும் ஷியா சுன்னி என்று முஸ்லிம்களை கூறு போட்டு முஸ்லிம்களை பிரித்து முஸ்லிம்களை முஸ்லிம்களால் கொலை  செய்து தமது அரசியல் நலன்களை பேணிவருகின்றது என்பது  மிகைப்படுத்தல் அல்ல.
முஸ்லிம்களின் ஒன்றுமையை உடைக்க மொசாட் மற்றும் மேற்கு உளவு அமைப்புகள கடுமையாக முயன்று வருகின்றது என்று  ஆய்வார்கள் தெரிவித்து வருகின்றனர் இதற்கு ஆதாரமாக மொசாட் மற்றும் மேற்கு உளவு அமைப்புகளின் முன்னாள் உறுப்பினர்கள் காலத்துக்கு காலம் இந்த சதி நாசகார வேலைகளை அவர்களே அவர்களின் வாய்களினால் கூறிவருகின்றனர்
பஹ்ரைனில் சில மாதங்களாக தொடர்ந்து மக்கள் ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் இன்று மக்களுன் ஏற்பட்ட மோதல்களில் இருவர் பலியாகியுள்ளனர். இணையதளங்கள், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள ஊடகங்களை பயன்படுத்தி வாலிபர்கள் தலைநகர் மனாமா விலுள்ள முக்கிய பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மக்களை வீதிகளில் இறங்கி போராடுமாறு அழைப்பு விடுக்கின்றனர். ஆர்பாட்டங்கள் தொடர்கின்றது மன்னர் ஹமாத் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மக்கள் மீது வன்முறை கடுமையாக பிரயோகிக்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது மேற்கு ஊடகங்கள்  பல ஷியாக்கள் குறிவைத்து தாக்கபடுவதாகவும் கொல்லபட்டவர்கள் பெரும்பாலும் ஷியாக்கள்தான் என்றும்  அங்கு தற்போது ஷியா சுன்னி யுத்தம் நடைபெறுகின்றது  என்ற அளவுக்கு செய்திகளை வழங்கிவருகின்றது
இதேவேளை ‘உஸாமா பின் லாதின்’ என்ற நூலை எழுதியுள்ள மைக்கல் சீயூவர் Michael Scheuer-என்ற அமெரிக்க பல்கலை Georgetown University- கழகத்தின் பாதுகாப்பு துறை பேராசிரியராக கடமையாற்றும்  முன்னாள் CIA  யின் ‘உஸாமா பின் லாதின் ‘ -chief of the CIA’s Osama bin Laden unit-  அணியின் 1996 முதல் 1999 வரையான கால பகுதில் தலைவராகவும் அதன் பின்னர் பாதுகாப்பு ஆய்வாளராகவும் செயல்பட்டவரும் அமெரிக்க பாதுகாப்பு தொடர்பில் பல புத்தகங்களை வெளியிட்டுள்ளவரும் தற்போது உஸாமா பின் லாதின் என்ற நூலை எழுதியுள்ள  இவர் முஸ்லிம்களை முஸ்லிம்களால் கொலை செய்யவேண்டும் அவர்கள் மத்தியில் உருவாகிவரும் ஊக்கத்தையும் ஒன்றுமையையும் தகர்க்கவேண்டும் போன்ற தனது கருத்துக்களை  முன்வைத்துள்ளார்
இவர் கடந்த 7 ஆம் திகதி (07.03.2011) தி வொசிங்டன் போஸ்ட்- The washington post பத்திரிகைக்கு இஸ்லாமிய உலகம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துக்களில் இரண்டை இங்கு தருகின்றேன்  ‘இஸ்லாமிய உலகில் எமது வெளிநாட்டு கொள்கையின் தாக்கத்தினால் எமது இஸ்லாமிய எதிரிகள் ஒன்றுமை படுத்தப்பட்டு ஊக்கப்படுத்தப்பட்டுள்ளனர் உண்மையான அமெரிக்காவின் நலனை முன்னிறுத்தி கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் அளவு நாம் அவர்களின் ஊக்கதை முறியடித்து அவர்களின் ஒன்றுமையை குழப்பலாம் , நாங்கள் எந்த அளவு போராட தேவையோ எந்த அளவுக்கு மட்டும் போராடும் இந்த யுத்தம் எங்களுடையது’ – -மற்றவரின் நலனுக்காக நாம் போராட வேண்டியது இல்லை -
‘முஸ்லிம்களை முஸ்லிம்களால் கொலை செய்யவும், முஸ்லிம்கள் இஸ்ரேலியர்களுடன் சண்டை பிடிக்கவும் கூடிய சூழல் ஒன்றை உருவாக்க உழைப்பதன் மூலம் மேற்குலகை விட்டும் அவர்களின்- இஸ்லாமிய உலகின்- வன்முறையை திசை திருப்பி விடும் வழியை கண்டு கொள்ளவதில் எமது நலன் தங்கியுள்ளது, அடிப்படையில் இது ஒரு நாகரீகத்தின் அதனுள் உள்ள விடையம் அதை நாம் அதற்கு சொந்தமானவர்களிடம் திருப்பி போட்டு விட்டு அவர்களின் உள்ளம் திருப்தி படும் வரை ஒருவரை ஒருவர் அவர்கள் கொல்லுவதை அமைதியாக பார்த்துகொண்டு இருக்கவேண்டும்’
இந்த கருத்துகளை ஒத்த விஷ கூற்றுக்களை காலத்துக்கு காலம் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை, வெளிநாடு விவகாரம், தேசிய பாதுகாப்பு என்ற துறைகளில் பேராசிரியர்களாக, நிபுணர்களாக, ஆய்வாளர்களாக இருக்கும் அமெரிக்காவின் முக்கிய பிரஜைகள்   வெளிப்படுத்தி   வந்துள்ளனர் தற்போது ஒபாமாவை விமர்சிக்கும் பல உளவுத்துறை  முன்னாள் ஆய்வாளர்கள் ஒபாமா நிர்வாகம் தெரிவு செய்யும் வெளிநாட்டு கொள்கைகள் இஸ்லாமிய சக்திகளை பலப்படுத்தி  வருவதாக தெரிவிகின்றனர்.
இவர்கள் அமெரிக்காவின் தேசிய நலன் கருதிய வெளிநாட்டு கொள்கையில் மாற்றங்கள் வேண்டும் என்று கூறும்போது  ஒபாமா நிர்வாகம் நாச வேலைகளுக்கு வழங்கி இருக்கும் கவனம் போதாது என்றுதான் கூறுகின்றனர். ஆனால் அமைதியாக இருக்கும் பல தேசிய பாதுகாப்பு ஆய்வாளர்கள் பலர் அமெரிக்கா தனது தேசிய நலன் கருதி எதை செய்யவேண்டுமோ அதை சிறப்பாக செய்து வருகின்றது அதன் விளைவுகள் வெளிப்படும்போது அதன் தரத்தை அதன் பலனை அனைவரும் கண்டு கொள்வர் என்று கூறுவது குறிபிடத்தக்கது.
இதேவேளை பஹ்ரைன் நாட்டின் மீது முஸ்லிம் நாடுகள் ராணுவ நடவடிக்கை எடுக்க முன்வந்திருப்பது துரதிருஷ்டவசமானது என ஈரான் வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர்  வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பான Gulf Cooperation Council கூட்டத்தில் இதனை தெரிவித்தார். பஹ்ரைன் நாட்டு மக்களின் தற்போதைய தீர்வு சட்டபடி அமைக்கப்பட உள்ள தலைமையை விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்திற்கு எதிராக Gulf Cooperation Council நாடுகள் இராணுவ நடவடிக்கையில் இறங்கியிருப்பது வேதனையளிக்கிறது. இந்தசெயலுக்கு பின்புலமாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது என்ற சந்தேகம் நிலவுகிறது. இதன்மூலம் உலகப்போர் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பஹ்ரைன் நாட்டின் மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி அதற்கு பதிலாக மாற்று தீர்வு மூலம் அந்நாட்டில் அமைதி ஏற்படுத்த வழிவகை காண வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்
சவூதியின்   இராணுவ முனைப்பும் ஈரானின்  இந்த கருத்துகளும்  முஸ்லிம் சக்திகள் மேற்கின் பொறியில் விழுந்து கொண்டிருப்பதை காட்டுவதாக உள்ளது.

No comments:

Post a Comment

المشاركات الشائعة