Search This Blog

May 10, 2011

பாபர் மஸ்ஜித் அலகாபாத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை


 அயோத்தி பாபர் மஸ்ஜித் குறித்து தொடரப்பட்ட வழக்கில் எந்த ஒரு தரப்பும் கோராத ஒரு தீர்வை அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பாகஎப்படி அளித்தது ? என்று புரியவில்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் வியப்புத் தெரிவித்துள்ளதுடன் இது ஒரு வினோதமானத் தீர்ப்பு என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அலகாபாத் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செய்யப்பட்ட மேல் முறையீட்டை விசாரிக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் அயோத்தியில் இருந்து இடித்துத் தகர்க்கப்பட்ட பாபர் மஸ்ஜித் அமைத்திருந்த 2.77 ஏக்கர் நிலம் மட்டுமன்றி, மத்திய அரசு கையகப்படுத்தியுள்ள 67 ஏக்கர் நிலத்திலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று நேற்று  உத்தரவிட்டுள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக  இந்திய மத்திய சுன்னி வக்பு வாரியம், இந்திய ஜம்மியதுல் உலமா ஆகியன முஸ்லிம் தரப்பிலும் ஹிந்து தரப்பில்  அகில பாரத் ஹிந்து மஹாசபா, நிர்மோகி அகாரா ஆகிய அமைப்புகளும், ராம் விராஜ்மான் சார்பில் ஒரு மேல் முறையீடும் செய்யப்பட்திருந்தது.
இந்த மேல் முறையீடுகளை நேற்று விசாரணைக்கு எடுத்த இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அப்தாப் ஆலம், ஆர்.எம்.லோதா ஆகியோர் கொண்ட நீதிமன்ற நீதிபதிகள  “அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு விநோதமானது. அதனை நடைமுறைப்படுத்த அனுமதிக்க முடியாது” என்று கூறி அதற்குத் தடை விதித்துள்ளனர் .
“சர்ச்சைக்குரிய பகுதியை பிரித்துத் தருமாறு எந்த ஒரு தரப்பும் கோராத நிலையில், தனது தீர்ப்பின் மூலம் ஒரு புதிய பரிமாணத்தை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கியுள்ளது . நிலத்தை பிரித்துத் தருமாறு ஒருவரும் கோரவில்லை. எனவே இத்தீர்ப்புக்கு தடை விதிக்கிறோம். இது ஒரு வினோதமானத் தீர்ப்பு என்றும் தெரிவித்துள்ளனர்.
இத்தீர்ப்பு ஆதாரங்களின் அடிப்படையில் இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் உள்ளது என்றும், ராமர் பிறந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்றும் ஒரு தவறான நிலையை கூறியுள்ளதாகவும் அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்துள்ள வக்பு வாரியம், இந்திய ஜம்மியதுல் உலமா ஆகிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

المشاركات الشائعة