எகிப்து, காஸா ரபாஹ் எல்லையை இன்று-28.05.2011- சனிக்கிழமை தொடக்கம் நிரந்தரமாக திறந்துள்ளது தினமும் 8 மணித்தியாலங்கள் இந்த எல்லை திருந்து விடப்படும் என்றும் வெள்ளி மற்றும் விடுமுறை தினங்களில் மட்டும் மூடப்படும் என்று எகிப்து தெரிவித்துள்ளது. இன்று எல்லை திறக்கப்பட்டவுடன் இரண்டு அம்புலன்சுகள் மற்றும் பல வாகனங்கள் எல்லையை கடந்து எகிப்தினுள் நுழைந்துள்ளது
இதன் ஊடாக 18 வயது தொடக்கம் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் எகிப்தின் விசா பெற்று செல்லவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது எகிப்து விரைவில் விசா அலுவலகம் ஒன்றை காஸாவில் திறக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது.
காஸாவில் 15 இலட்சம் பலஸ்தீனர்கள் வாழ்கின்றனர் அதன் ரபாஹ் எல்லை மட்டும்தான் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லாத எல்லைக் கடவையாகும் ஆனாலும் எகிப்தில் இருந்து கொண்டுசெல்லப்படும் வர்த்தக பொருட்கள் இஸ்ரேலின் ஊடாகத்தான் தொடர்ந்து கொண்டு செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனால் எதிர்காலத்தில் காஸா ரபாஹ் எல்லையின் ஊடாக வர்த்தக பொருட்கள் கொண்டுசெல்லப்படும் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது இந்த எல்லை திறப்பு இஸ்ரேலை சினம் கொள்ளசெய்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment