அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர் கட்சி தலைவர் கோரியுள்ளார் அக்கரைப்பற்று மாநகர சபையின் எல்லைக்குள் மதுபான வகைகள் மற்றும் போதை பொருட்கள் போன்றவற்றை சந்தைப்படுத்தும் செயல்பாடுகளை முற்றாக தடைசெய்வதற்கும் அவற்றை உபயோகிபதற்கும் எதிராக கடுமையான சட்ட திட்டங்களை அமுல் நடத்த வேண்டும் என்று அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் அஷ் ஷெய்க் எஸ் .எல் .எம் . ஹனீபா மதனி வேண்டுகோள் வித்துள்ளார்.
மேலும் அவர் நமது மாநகரம் தனித்துவமான இஸ்லாமியப் பண்புகளும் உயரிய விழுமியங்களும் நிறைந்த பிரதேசமாக மிளிர எம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள அனைவரும் ஒன்றினைந்து பாடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் மேலும் அவர் விலைமனு கோரல் ஒப்பந்த நடைமுறைகள் என்பன அர்த்த பூர்வமாக முழுமையாக அரச நிர்வாக முறைகளை அனுசரித்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும்
பல்கலை கழக பட்டபடிப்பை முடித்து விட்டு அதிகமானவர்கள் தொழில் இன்றி இருப்தாகவும் தொழில் வழங்கும் சந்தர்பங்களில் அவர்களுக்கு அரசியல் வேறுபாடு இன்றி வழங்கபடுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக கருத்துரைத்துள்ள மற்றுமொரு அக்கரைப்பற்று மாநகர சபை ஆளும் தரப்பு உறுப்பினர் மதுபான வகைகள் மற்றும் போதை பொருட்கள் போன்றவற்றை சந்தைப்படுத்தும் செயல்பாடுகளை முற்றாக தடைசெய்வதற்கு நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார் கண்டி மாவட்டதில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் அக்குரணை நகர எலைக்குள் மதுபான விற்பனையில் எவரும் ஈடுபட அனுமதிப்பதில்லை என்று அறிய முடிகின்றது.
No comments:
Post a Comment