Search This Blog

Jun 2, 2011

முல்லைத்தீவில் 20 வருட பழமையான தேன் மீட்பு


முஹம்மது ஜான்ஸின்
1990ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டனர் . முல்லைத்தீவு நகரப் பகுதியில் யூலை மாதம் இராணுவத்துக்கும் புலிகளுக்குமிடையே பாரிய சண்டை தொடர்ச்சியாக இடம்பெற்றது. இதனால் அப்பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து புத்தளம் போன்ற பிரதேசங்களில் வந்து தங்கினர்.
பொருட்களை கொண்டுவர முடியாத அவர்கள் அவற்றை நிலத்தில் புதைத்து விட்டு வந்தனர் . தற்போது யுத்தம் முடிவுற்ற நிலையில் முஸ்லிம்கள் மீண்டும் முல்லைத்தீவில் குடியேறி வருகின்றனர். குடியேறிய சிலர் தாம் முன்பு புதைத்து விட்டு வந்த பொருட்களை மீட்டுள்ளனர் .
பெரும்பாலும் அவை அழிவடைந்த நிலையிலேயே உள்ளது. முஹம்மது ராஜா (முல்லை ராஜா) என்பவர் அண்மையில் தனது பொருட்களை தோண்டியெடுக்கும் போது பல பொருட்கள் சுனாமியாலும் சூட்டினாலும் அழிவடைந்திருப்பதைக் கண்டார். ஆனால் தான் 20 வருடத்துக்கு முன்பு புதைத்த தேன் மட்டும் போத்தலோ அதன் மூடியோ சேதமடையா நிலையிலிருப்பதைக் கண்டார்.
இதனை இத்தகவலைத் தரும் ஜான்ஸின் அவர்களும் தனது முல்லைத்தீவு விஜயத்தின் போது மீட்பை நேரடியாக பார்வையிட்டுள்ளார். தேன் பிரமிட்டுகளில் வைக்கப்படும் உடல்கள் கெடாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. போட்டோ இணைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

المشاركات الشائعة