Search This Blog

Jun 8, 2011

தீர்வு தொடர்பில் அரசு வெளிப்டையாக செயல்படவேண்டும்: ஹசன் அலி


சிருபான்மையினருக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பாக அரசாங்கம் வெளிப்படையாக நடந்து கொள்ளவேண்டும் இத்தீர்வு முயற்சிகள் பற்றி எழுத்துமூல முன்மொழிவுகளையும் வெளியிடவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஹசன் அலி  தெரிவித்துள்ளார். சிறுபான்மை கட்சிகள் தமக்குள்ள பிரச்சினைப்பட்டு கொள்ளாது எத்தகைய தீர்வை தாம் பெறவேண்டும் என்பதில் உறுதியான முடிவுக்கு வரவேண்டும்.
இதில் தமிழ் தரப்பும் , முஸ்லிம் தரப்பும் விட்டு கொடுப்புடன் பிரச்சினைகளை அணுகி சாதகமான தீர்வு திட்டமொன்றை பெற்றுக்கொள்ள சகலரும் பாடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது வரையில் பேசுக்கு அரசாங்கத்தினால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு உத்தியோக பூர்வமான அழைப்பு விடுக்கப்படவில்லை.
அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையில் கடந்த சர்வகட்சி பேச்சு வார்த்தையின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த சிறுபான்மை கட்சிகள் பங்கு பற்றின இதில் முஸ்லிம் காங்கிரஸ் சில யோசனைகளை முன்வைத்துள்ளது அதன் ஊடாக சிறுபான்மையினரின் எதிர்பார்ப்புகள் , அபிலாசைகள் என்ன என்பதை அமைச்சரின் ஊடாக அன்று ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்டுள்ளது அங்கு சிறுபான்மை தரப்பில் ஒன்று பட்ட கருத்து முன்வைக்கபட்டது.
சிறுபான்மை தரப்பால் ஒட்டுமொத்த உடன்பாட்டுடன் முன்வைக்கப்பட்ட யோசனைகளை பின்னர் தனித்தரப்பு என்றும் , நாங்கள்தான் ஏக பிரதிநிதிகள் என்றும் பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு சென்றமையால் இங்கு பிரச்சினை உருவாகியுள்ளது இதனால் அரசாங்கம் தீர்வு திட்டம் தொடர்பாக எதையும் முன்வைக்கவில்லை .
சிறுபான்மையினர் மத்தியில் இருக்கின்ற கருத்துவேறுபாடுகளை சுட்டிக்காட்டி பேச்சு வார்த்தைகள் தள்ளிப்போடப்படுகின்றது இது பெரும்பான்மை இன சமூகத்துக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மையாகும் கடந்த 30 வருட காலமாக முஸ்லிம் சிறுபான்மை இன கட்சிகளுக்குள் ஒன்றுமை இல்லை என்று குற்றம்சாட்டப்படுகின்றது. இந்த விடையம் பெரும்பான்மையின சமூகத்தினரின் ஒரு உள்நடவடிகை என்ற சந்தேகமும் சிலரால் முன்வைக்கப்படுகின்றது.
13வது திருத்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டு அதைவிட கூடுதலான அதிகாரங்கள் வழங்குவதற்கான முன்மொழிவுகளும் 18வது திருத்த சட்டமூலத்தின் ஊடாக பெறக்கூடிய நிலை உள்ளது. எல்லோரும் ஏதோ ஒருவகையில் தவறிழைத்து கொண்டுதான் இருக்கின்றோம் எல்லோரும் இன்றைய அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து கொண்டு போகின்றவர்களே ஒழிய எமது பிரச்சினைகள் என்ன என்று சரியாக இனம் கண்டு சரியான ஒரே நோக்கில் எல்லோரும் போகவில்லை.
இதனால் நாங்கள் சிறுபான்மை கட்சிகள் எல்லோரும் சேர்ந்து தங்களுடைய பிரச்சினைகளுக்கு என்ன செய்வது என்பது பற்றிய தீர்கமான முடிவினை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

المشاركات الشائعة