அரசாங்கத்திற்கும் தமிழ் கூட்டமைப்புகளுக்கும் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் அரசியல் தரப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டுமென்ற அவர்களினது கோரிக்கை நியாயமானதாகும் என பிரதமர் தி.மு. ஜயரத்ன தெரிவித்தார்.
இந்த நாட்டில் ஐந்து வகையிலான இனத்தவர்கள் வாழ்கின்றனர். இந்த வகையில் பேச்சுவார்த்தைகள் மூலம் வடக்கில் பெற்றுக் கொடுக்கப்படும் தீர்வுகள் ஏனைய இனங்களையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். நேற்று -27.6.2011- கண்டிக்கு விஜயம் செய்த பிரதமர் மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களின் ஆசியைப் பெற்ற பின்னர் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் மேலும் அங்கு குறிப்பிடுகையில், தற்போது அதிகாரப் பகிர்வு தீர்வுத் திட்ட பணிகள் இடம் பெற்று வருகின்றன. இந்த தீர்வுத் திட்ட விடயங்கள் தனி நபருக்கோ அல்லது தனிப்பட்ட கட்சி சார்பாகவோ இல்லாமல் எதிர்காலத்தில் எந்தவொரு பிரச்சினைகளுக்கும் வழிவகுக் காத வகையிலும் மற்றும் ஏனைய இனத்தவர்களின் கெளரவத்தை உறுதிப் படுத்தும் வகையிலும் இந்த அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. எதிர்க் கட்சியினர் இன்று நாட்டுக்கு எதிராக பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக சர்வதேச தரங்கள் வெளிக்கொணரும் வகையில் இவர்களின் செயற்பாடுகள் இருந்து வருகின்றன. அன்று வடக்கில் தமிழ் அமைப்புகளினால் முன்னெடுத்துச் சென்ற கூட்டங்களை குழப்பி அதில் பல்வேறு பிரச்சினைகளையும் பிளவுகளை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். அதுபோன்று நாட்டை அபகீர்த்திக்குட்படுத்தி வெளிநாட்டு செல்வாக்கை பெறுவதிலும் அவர்கள் முயற்சிபண்ணி வருகின்றனர் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.-எம். ஏ. அமீனுல்லா-தினகரன்
No comments:
Post a Comment