Search This Blog

Jun 7, 2011

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களின் இன்றைய நிலை


முஹம்மது ஜான்ஸின்

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து முஸ்லிம்கள் 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ச்சியாக இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களால் முல்லைத்தீவு நகரப்பகுதியில் முஸ்லிம்களின் வீடுகள் சில அழிவுற்றிருந்தன. 1996இல் புலிகளால் முல்லைத்தீவு இரானுவமுகாம் கைப்பற்றப்பட்ட போது இன்னும் சில வீடுகள் அழிவடைந்தன.

2004 டிசம்பர் 26ஆம் திகதி இலங்கையை தாக்கிய சுனாமி ஆழிப்பேரலையால் முல்லைத்தீவு அதிக பாதிப்புக்குள்ளாகியது. கடற்கரையோரத்தில் இரண்டு வீடுகள் மட்டும் சிறு உடைவுகளுடன் தப்பியிருந்தது. முள்ளிவாய்க்கால் கள்ளப்பாடு போன்ற பிரதேசங்களில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் கடைகள் அழிவடைந்ததுடன் ஆயிரத்தி ஐநூறு பொதுமக்களும் இரண்டாயிரம் புலிகளும் பலியாகியிருந்தனர் விரிவாக இதன் போது முல்லைத்தீவு முஸ்லிம் பாடசாலை மற்றும் முல்லைத்தீவு மகாவித்தியாலயம் என்பன முற்றாக அழிவடைந்திருந்தன. தற்போது முஸ்லிம் பாடசாலை இருந்த இடம் தெரியாமல் வெரும் பற்றையாக காட்சியளிக்கின்றது
சுனாமிக்குப்பிறகு இப்பிரதேசங்களில் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து சிலர் குடியேறியிருந்தனர். முஸ்லிம்களுக்கு சொந்தமான சில காணிகள் கட்டிட எச்சங்கள் அடையாளம் தெரியாதவாறு புல்டோசர் மூலம் புலிகளால் அப்புறப்படுத்தப்பட்டிருந்தது. இதைப்பற்றி முஸ்லிம் காணி உரிமையாளர்கள் புலிகளிடம் விசாரித்த போது இவற்றை உடைக்க உங்களிடம் எதற்கு அனுமதி பெற வேண்டும் என்று அதிகாரத் தோரணையில் கேள்வியெழுப்பியிருந்தனர். 1996 முதல் 1999 மே மாதம் வரை இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் முல்லைத்தீவு தமிழர்கள் இடம்பெயர்வுகளுக்கும் அழிவுகளுக்கும் முகம்கொடுத்து இன்று புலிகளை வெருக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வீட்டுக்கொரு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஓவ்வொரு வீட்டிலும் ஒருவர் அங்கவீனராக அல்லது கொல்லப்பட்டுள்ள நிலமை காணப்படுகிறது. எங்கும் சோகமயம். நெடுங்கேணிக்கு அடுத்த குடியிருப்பு தண்ணீரூற்றிலேயே காணப்படுகிறது. அடுத்தது முல்லைத்தீவு. அங்கு மக்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். கச்சேரியும் உதவி அரசாங்க அதிபர் அலுவலகமும் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்றன. 1874 என திகதியிடப்பட்ட முல்லைத்தீவு பள்ளிவாசலின் முகத்தோற்றம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய பகுதி திருத்தியமைக்கப்பட்டு அங்கு தொழுகை இடம்பெருகிறது. பள்ளிக்கு சொந்தமான காணியில் கடைகளை கட்டி வாடகைக்கு கொடுக்க தற்போதைய நிர்வாக சபை முடிவெடுத்துள்ளது. அதேவேளை முல்லைத்தீவு நகரப்பகுதி வண்ணான்குளம் கள்ளப்பாடு போன்ற பகுதிகளில் 15 முஸ்லிம் குடும்பங்களே மீளக்குடியமர்ந்துள்ளனர். மீள்குடியேற்ற மற்றும் வீடமைப்பு உதவிகள் என்பன மந்தகதியில் நடைபெறுவதால் முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும் மந்தகதியிலேயே உள்ளது.
தண்ணீரூற்றிலிருந்து 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் 350 குடும்பங்கள் தற்போது மீளக்குடியேறியுள்ளன. 1990இல் 600 குடும்பங்களாக காணப்பட்ட இப்பிரதேச மக்கள் கடந்த 20 வருடங்களில் இரண்டாயிரம் குடும்பங்களாக பல்கிப்பெருகியுள்ளனர்.
ஆனால் இப்பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு 600 காணிகள் மட்டுமே இருப்பதால் பல குடும்பங்கள் மீளக்குடியேற முடியாமல் உள்ளனர்.தண்ணீரூற்று புளியடி பிரதேசத்தில் 6 குடும்பங்கள் மாத்திரம் குடியேறியுள்ள அதேவேளை நீராவிப்பிட்டி ஹிஜ்ரத்புரம் போன்ற பகுதிகளிலேயே அதிகமான குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளனர். கொட்டில்கள் அமைக்க உதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 ஆடுகள் வளர்ப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன. பாடசாலை பள்ளிவாசல் என்பன இயங்குகின்றன. தண்ணீரூற்று பள்ளிவாசல் புலிகளால் தொலைத்தொடர்பு நிலையமாக பாவிக்கப்பட்டிருந்ததால் கட்டிடம் சேதமடையாமல் உள்ளது. இருந்தபோதிலும் கூரை உடைந்துவிழும் நிலையிலுள்ளது. ஆக தண்ணீரூற்று மீள்குடியேற்றம் வெற்றிகரமாகவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் காலத்தால் தமிழர்களை முந்தியவர்கள். இவர்கள் 1560களின் பின்னரே இப்பிரதேசத்தில் குடியேறத் தொடங்கினர். 1560களில் போத்துக்கீஸர் யாழ்ப்பாணம் கோட்டை பறங்கித்தெரு போன்ற பிரதேசங்களைத் தாக்கிய போது அங்கிருந்து சிலர் தண்ணீரூற்றுக்குச் சென்றனர். இவர்கள் விவசாயிகளாகக் காணப்பட்டதால் தண்ணிமுறிப்பு முறிப்பு போன்ற பிரதேசங்களில் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். அக்காலப்பகுதியில் முல்லைத்தீவு வெறும் கடல்சார்ந்த பிரதேசமாகவும் மக்கள் சஞ்சாரமற்ற இடமாகவும் விளங்கியுள்ளது. 1744இல் யாழ்ப்பாணம் நல்லுரிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது சில முஸ்லிம் குடும்பங்கள் முல்லைத்தீவில் குடியேறினர்.
1800 களில் பிரித்தானியப்படைகள் முல்லைத்தீவில் ஒரு பாதுகாப்பு கோட்டையை கட்டினர். இந்த கோட்டையை தாக்க பண்டாரவன்னியன் கண்டி இராஜதானிக்கு தூது அனுப்பினான். அதிகமான முஸ்லிம்களை கொண்டிருந்த கண்டி படை பண்டாரவன்னியனுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தி பிரித்தானிய இரானுவத்தை தோற்கடித்து முல்லைத்தீவை கைப்பற்றினர். இந்த முஸ்லிம் படைவீரர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் குடியேறியுள்ளனர். இதன் பிறகே தமிழர்கள் முல்லைத்தீவு நகரப்பகுதியில் குடியேறத் தொடங்கினர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிலாவத்தை தண்ணீரூற்று நீராவிப்பிட்டி ஹிஜ்ரத்புரம் முறிப்பு போன்ற பகுதிகளில் பெருமளவிலான காணிகள் முஸ்லிம்களுக்கு சொந்தமாக இருப்பதன் மூலம் இம்மாவட்டத்தின் மூத்த குடிகள் முஸ்லிம்கள் என்பது அறியப்படுகின்றது. வன்னியா; 17- 18ஆம் நூற்றாண்டிலே ஒட்டிசுட்டானுக்கு அண்மையாகவுள்ள கற்சிலைமடு மன்னாரின் எல்லைக்கிராமங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்துள்ளனர். முல்லைத்தீவு காட்டுப்பகுதி மற்றும் நகரப்பகுதிகள் வன்னியரின் கட்டப்பாட்டின் கீழ் இருக்கவில்லை. ஆனால் இவர்களது கிளர்ச்சிப்படையில் முஸ்லிம்கள் காணப்பட்டுள்ளனர்.
அன்று தொட்டு இன்று வரை முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களும் தமிழர்களும் அன்னியோன்யமாக பரஸ்பரம் அன்புடன் பழகுவதைக் காணலாம். புளொட் அமைப்புக் கூட 1984இல் இடம்பெற்ற திம்பு பேச்சுவார்த்தைகளில் முல்லைத்தீவைச் சேர்ந்த முஸ்லிமொருவரை தமது பிரதிநிதிகளில் ஒருவராக அனுப்பி முஸ்லிம்களை கௌரவப்படுத்தியிருந்தனர். முல்லைத்தீவில் யாழ்ப்பாணத்தில் அல்லது மன்னாரில் காணப்படுவது போன்ற முஸ்லிம்விரோத போக்கு காணப்படுவதில்லை.

No comments:

Post a Comment

المشاركات الشائعة