முஹம்மது ஜான்ஸின்
யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி 1963ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலைக்கு ஒரு கீதம் வேண்டுமென்ற அவசியம் ஏற்பட அப்போது அங்கு கடமையாற்றிய தமிழ்ப்புலமைமிக்க ஆசிரியர் அமரர் அசாரியஸ் பொர்ணான்டோ அவர்கள் உடனடியாக ஒரு பாடசாலைக் கீதத்தை இயற்றிக் கொடுத்தார்கள்.
யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி 1963ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலைக்கு ஒரு கீதம் வேண்டுமென்ற அவசியம் ஏற்பட அப்போது அங்கு கடமையாற்றிய தமிழ்ப்புலமைமிக்க ஆசிரியர் அமரர் அசாரியஸ் பொர்ணான்டோ அவர்கள் உடனடியாக ஒரு பாடசாலைக் கீதத்தை இயற்றிக் கொடுத்தார்கள்.
வளர்கலை மாமதி யோடிளந் தாரகை வானக மேலொளி மல்க ,வல்லோனின் மார்க்கமதை யோது நம் சாலை வளமே வாசிகள் நல்க, வந்தனை மொழிமெய் சிந்தனை மூன்றும் வன்மை பெறஞ்சலி செய்வோம். வகைபல கடமை கண்யம் வாகை புனை கட்டுப்பாட்டில் வாழின்ப யாழ் ஒஸ்மான்யா!
என்று தொடரும் இந்த கீதத்துக்கான மெட்டையும் பொர் ணான்டோ ஆசிரியர் அவர்களே பாடிக் காண்பித்துக் கொடுத்தார். 1964களில் அதிபராக இருந்த மர்ஹூம் எம.எம். யூசுப் அவர்கள் கீதத்தின் சில பதங்களை இஸ்லாமிய வடிவமாக்கினார். ஆனால் கீதத்தின் மெட்டு மாறவில்லை. அன்று முதல் 1990ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்படும் வரை அதே மெட்டில் அந்த கீதம் பாடப்பட்டு வந்தது.ஆனால் 2002இல் மீளக்குடியேறிய யாழ்ப்பாண முஸ்லிம்கள் சிலர் பாடசாலையை சுபியான் மௌலவியின் ஏற்பாட்டில் ஆரம்பித்தனர். அதே கல்லூரி கீதமே பாடப்பட்டது. ஆனால் அதன் மெட்டுக்கள் மாற்றப்பட்டு கருத்து மாறும் விதமாக இன்று பாடப்பட்டு வருவதாக முன்னாள் பாடசாலை ஆசிரியர்கள் சிலர் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
ஆரம்ப காலத்தில் மூன்று விளையாட்டு இல்லங்கள் இருந்தன. அலி (பச்சை நிறம்) ஷாபி (நீல நிறம்) இக்பால் ( சிவப்பு நிறம்) போன்ற இல்லங்களை மையமாக வைத்து பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறும். எதிர்காலத்தில் மாணவர் தொகை அதிகரிக்கும் எனவே விளையாட்டு இல்லங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டி வரும் என்று கருதிய யூசுப் அதிபர் அவர்கள் பாடசாலைக் கீதத்தில் ஜின்னா மற்றும் கஸ்ஸாலி(மஞ்சல் நிறம் ) ஆகிய இல்லங்களின் பெயர்களையும் இனைத்தார். அந்த வரிகள் பின்வருமாறு:
மகிபன் அலி கலீபா ஷாபி இமாம் நிறை மாதத்வ ஞானி கஸ்ஸாலி
வான்கவி இக்பால் சத்தியவாத மேதை சுதந்திர ஜின்னா
மன்னீய நாம வழியில் மகிழைந்து அணிகளானோம்
என்ற வரிகள் அன்று சேர்த்தெழுதப்பட்டன.
வான்கவி இக்பால் சத்தியவாத மேதை சுதந்திர ஜின்னா
மன்னீய நாம வழியில் மகிழைந்து அணிகளானோம்
என்ற வரிகள் அன்று சேர்த்தெழுதப்பட்டன.
அவர் முன்கூறியது போலவே 1975களில் கஸ்ஸாலி இல்லமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இடையில் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்ததால் கஸ்ஸாலி இல்லம் கைவிடப்பட்டது. அண்மையில் இடம்பெற்ற பாடசாலை விளையாட்டுப் போட்டியில் இல்லங்களின் நிறங்கள் கூட மாற்றம் பெற்று மஞ்சல் செம்மஞ்சல் போன்ற நிறங்கள் உள்வாங்கப்பட்டு பாடசாலையின் வரலாறு திரிபு படுத்தப்பட்டிருப்பதாக முன்னாள் மாணவர்கள் சிலர் கவலைப்பட்டனர். பாடசாலை பழைய மாணவர் சங்கமும் இது விடயத்தில் அசிரத்தையாக இருப்பதாக அதில் அங்கம் வகிக்காத பழைய மாணவர்கள் சிலர் குறிப்பிட்டனர்.
அதிபராக தற்போது கடமையாற்றி வருபவர் மௌலவி ஆசிரியர் என்பதால் அவருக்கு பாடசாலையின் வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை. பாடசாலை கீதத்தின் மெட்டையும் விளையாட்டு இல்லங்களின் நிறங்களையும் மாற்றி வரலாற்று ரீதியான முறைமைக்கு பாதகம் ஏற்படுத்தாது அவற்றை மீளக்கொண்டுவருமாறு சிலர் வேண்டிக்கொண்டதன் பிரகாரம் இச்செய்தி எழுதப்பட்டது. ஆசிரியர்களும் பழைய மாணவர் சங்கமும் யதார்த்தத்தை விளங்கி வரலாற்று முறைகளை மீண்டும் அமுல்படுத்த வேண்டும்!
No comments:
Post a Comment