Search This Blog

Jun 25, 2011

இலங்கை மாணவர்களுக்கு அமெரிக்க தலைமைத்துவப் பயிற்சி 6 முஸ்லிம் மாணவர்கள்



அமெரிக்காவின் ஹாவார்ட் மற்றும் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகங்களில், சர்வதேச மாணவர்களுக்கான இரண்டு வாரகால தலைமைத்துவ பயிற்சி நெறி நடைபெறவுள்ளது 2012 நடைமுறை தலைமைத்துவ மாநாடு என்ற தலைப்பில் உலகின் குறித்த 30 நாடுகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 300 மாணவ மாணவியர் பங்குகொள்வார்கள் என்று அறிவிக்கபட்டுள்ளது.
  2012 “செயலில் தலைமைத்துவ உச்சி மாநாடு’ என்ற இந்த மாநாடு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த முறை இலங்கையிலிருந்து இந்த மாநாட்டில் 33 மாணவர்கள் பங்குகொள்ளவுள்ளனர்.
33 இலங்கை மாணவர்களில் 6 முஸ்லிம் மாணவர்களுக்கும் இதில் தெரிவாகியுள்ளனர் நிஷாத் கரீம், ஆக்கில் ரிபாய், ஷிம்பர் மில்பர், ஷெரீன் அக்பர் அலி, மான்ஷா அப்துல்லா, அஹ்லா மிஸ்வர் ஆகிய முஸ்லிம் மாணவர்களும் இதற்கு தெரிவாகியுள்ளதாக அறியமுடிகின்றது. கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து இது வரை 550 இலங்கையைச்சேர்ந்த 16 – 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்களில் 470 பேர்வரையில் யேல், ஹவார்ட், ஸ்ரான் போர்ட், ஒக்ஸ்போட் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் கல்வி பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுகின்றது . 1956 இல் ஸ்தாபிக்கப்பட்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஐசனோவர் நிதியத்தின் ஏற்பாட்டில் நிகழ்ச்சித் திட்டங்களின் கீழ் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுகின்றது.

No comments:

Post a Comment

المشاركات الشائعة