Search This Blog

Jun 28, 2011

ஹிங்குராணை விவசாயிகளின் காணிப் பிரச்சினைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு கிடைக்குமா ?


ஹிங்குராணை சீனித் தொழிச்சாலை தொடர்பான விவசாயிகளின் காணிப் பிரச்சினைகளை ஒரு மதத்திற்குள் தீர்வு காணுமாறு அமைச்சர் தயாசிற திஸ்சேரா மீண்டும் அறிவுறுத்தியுள்ளார் ஹிங்குராணை சீனித் தொழிச்சாலைக்கும் அந்த பிரதேச விவசாயிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான காணி பிரச்சினை நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வருவதுடன் காணி விடயத்தில் இராணுவம் போலீஸ் பிரிவுகள் தலையிடும் சம்பங்களும் இடம்பெற்றுள்ளது என்று சுட்டிக் கட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் ஆகியோர் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அரசாங்க வளங்கள் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனை குழு கூட்டத்தில் விரிவாக எடுத்துரைத்துள்ளனர் அங்கு உரையாற்றியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மல்லிகைத்தீவு, வாங்காமம், ஆலம்குலம், குடுவில் காட்டுவெளி , பொத்தன் வெளி ஆகிய பிரதேச விவசாயிகள் வீணாக நீண்ட காலமாக அலைகழிக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.
சீனித் தொழிச்சாலை முன்பு முடப்பட்டதன் பின்னர் சீனிக் கூட்டுத்தாபனத்தால் பயன்படுத்தப்படாத விவயாயிகளின் காணிகளை அவற்றின் சொந்த காரர்களுக்கு மீண்டும் கையளிக்கவும் பாதிகபட்டுள்ள தொழிலாளர்களுக்கு உரிய நஷ்ட ஈடுகளை வழங்க நடவடிக்கைகளை எடுக்குமாறு நீண்டகாலமாக அம்பாறை அரசாங்க அதிபருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ள படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
நீதிமன்றம் சென்று தங்களது காணிக்கை பெற்றுகொள்ள சாதகமான தீர்ப்புகளை பெற்றிருப்பவர்களும் வேண்டுமென்றே உயர் அதிகாரிகளினால் அலைகழிக்கப் படுவதாகவும் தெரிவித்துள்ளார் இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் தயாசிற திஸ்சேரா ஹிங்குராணை சீனித் தொழிச்சாலை சம்பந்தபட்ட சகல காணிப் பிரச்சினைகளையும் இனம் கண்டு உரிய நிவாரணத்தை விவசாகிகளுக்கு வழங்கும் நோக்குடன் ஒரு குழுவினரை அமைத்து செல்படுமாறு அம்பாறை அரச அதிபருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் இதுவரை நிறைவேற்றபடாமை தொடர்பில் உடனடியாக தனக்கு அறிக்கை சமர்பிக்குமாறு அமைச்சின் செயலாளரை பணிதுள்ளதுடன் குறித்த குழுவினரை உடனடியாக அமைத்து ஒரு மாத காலத்துக்குள் தீர்வு காணுமாறும் மீண்டும் பணித்துள்ளார்
இந்த நீண்டகால காணி பிரச்சினை தொடர்பில் கருத்துரைத்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி இது தொடர்பாக முடிவுகளை எடுக்கக் கூடிய உயர் அதிகாரிகள் தமிழ் மொழிக் தெரியாதவர்களாக இருப்பதால் இந்த நிலைமை நீண்டகாலமாக தொடர்கின்றது மேலும் காணி பிரச்சினைகள் பல வற்றை இழுத்தடிக்க இது போன்ற குறைபாட்டை சில அதிகாரிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தியும் கொள்கின்றனர் , இராணுவம் மற்றும் போலீஸ் பிரிவுகளும் கூட காணிப்பிரச்சினை அடிக்கடி தலையிட்டு அச்சுறுத்துவதாக எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ள. அண்மையில் இறக்காமம் பிரதேசத்தில் வேளாண்மை பயிர் செய்யப்பட்ட வயல் நிலத்துக்குள் போலீஸ் பிரிவை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் உழவு இயந்திரங்களை கொண்டு அழிவுகளை ஏற்படுத்தி அட்டகாசங்கள் செய்தமையை அம்பாறை அரச அதிபரிடம் முறையிட்டுத் தடை செய்யவேண்டி இருந்ததாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்
முஸ்லிம்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகளை ஜனாதிபதி மட்டத்துக்கு எடுத்துரைக்க ஏதுவாக புதிய கேள்வி கொத்தை தயாரித்து தகவல்களை திரட்டும் முயற்சியில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

المشاركات الشائعة