Search This Blog

Jun 19, 2011

சிறுபான்மை மக்களின் காணிகள் திருமலை மாவட்டத்தில் அபகரிப்பு

ஏ.அப்துல்லாஹ்: நேற்று வெளியான நவமணி  பத்திரிகையில்  ‘சிறுபான்மை மக்களின் காணிகள்

திருமலை மாவட்டத்தில் அபகரிப்பு’ என்ற தலைப்பில் வெளியான செய்தியை lankamuslim.org வாசகர்களுக்கு வழங்குகின்றேன். திருகோணமலை மாவட்டத்தில் சிறுபான்மை இன மக்களுக்கு சொந்தமான காணிகளைச் சிங்கள மக்கள் கையகப்படுத்தி வருவதுடன் அரசுக்கு சொந்தமான காணிகளும் உல்லாச பயணிகளின் ஹோட்டல்களுக்கு தாரைவார்த்து கொடுக்கப்படுவதாக நம்பகமான தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன என்று நவமணி பத்திரிகை தெரிவித்துள்ளது.
மூதூரிலுள்ள ஒட்டு , படுகாடு ஆகிய பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் , தமிழ் மக்களுக்கு உரித்தான காணிக்கை திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பெளத்த பிக்கு ஒருவரின் தலைமையில் சென்ற சிங்கள மக்கள் ஆக்கிரமித்துள்ளனர். இந்த விடையம் தொடர்பில் பொலிசாருக்கு அறிவித்தும் அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது. விரிவாக குறிபிட்ட இந்த இரு பிரதேசங்களிலும் வசிக்கும் தமிழ் , முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் இதுவரை சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பு இவ்வாறு சிங்கள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று குச்சவெளி பிரதேசசபை எல்லைக்கு உட்பட்ட தென்னைமரவாடி பிரதேசத்திலும் தமிழ் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் சிங்கள மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இந்த பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் பேசும் மக்கள் அங்கிருந்து வெளியேறி வேறிடங்களில் வாழ்ந்து வந்தனர் இந்த நிலையில் தற்போது அமைதி நிலவுவதன் காரணமாக இந்த மக்கள் மீள் குடியேற அங்கு சென்றபோது தமக்கு சொந்தமான காணிகள் சிங்கள மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளமையைத் தெரிந்து கொண்டுள்ளனர்.
இந்த விடையங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இதை தடுத்து நிறுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் எதுவும் இதுவரை மேற்கொள்ள படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுகின்றது.
மேலும் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் செறிந்துவாழும் குச்சவெளி பிரதேசத்தில் அரசுக்கு சொந்தமான காணிகள் ஹோட்டல்கள் நிர்மாணிக்க வழங்கப்பட்டு வருகின்றன இந்த பிரதேசத்தில் அரசுக்கு சொந்தமான காணிகளில் ஹோட்டல்கள் நிர்மாணிக்க என ஒரு ஹோட்டலுக்கு எட்டு ஏக்கர் நிலப்பரப்பு காணிகள் 26 பேருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளன இவற்றினை அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே வழங்கியுள்ள தகவலும் தற்போது வெளியாகியுள்ளன .
மேலும் பல ஏக்கர் அரச காணிகளும் இவ்வாறு தாரை வார்க்கப்படவுள்ளன இவை அனைத்தும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன . இதன் காரணமாக எதிர்காலத்தில் அங்கு வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அரச காணிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையேற்பட்டுள்ளது.
இதேவேளை கப்பல்துறை என்ற இடத்தில் வீடமைப்பு திட்டத்துக்காகச் சுவீகரிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு சொந்தமான காணிகளில் நிர்மானிக்கப் பட்டுள்ள வீடுகளில் அதிகளவான வீடுகள் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிபிடத்தக்கது என்று அந்த பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

Thanks:Lankamuslim

No comments:

Post a Comment

المشاركات الشائعة