Search This Blog

Jun 15, 2011

ஜேர்மனி செய்தி பாலஸ்தீனம் தனி நாடாக உருவெடுக்க ஜேர்மனி ஆதரவு: அமைச்சர் தகவல்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரத்தில் ஒரு தரப்பினரை மட்டும் பாதிக்கும் நடவடிக்கைக்கு ஜேர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது.
லிபியாவில் திடீர் பயணம் மேற்கொண்ட ஜேர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் இஸ்ரேலில் ஒரு நாள் இருந்தனர்.
அப்போது பாலஸ்தீன விடயத்தில் ஒரு சார்பு செயல்பாடு அமைதி நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கூறினர். பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் மற்றும் ஐ.நா.வின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்ற முயற்சி குறித்து குய்டோ வெஸ்டர்வெலே கூறுகையில்,"பாலஸ்தீன மக்கள் தனி நாடு பெறுவதை ஜேர்மனி ஆதரிக்கிறது" என்றார்.
அமைதி நடவடிக்கையில் ஒருசார்பு நிலை அமைதிப்பேச்சு வார்த்தையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர்வெலே கூறினார். பாலஸ்தீன பிரதமர் சலாம் பயாத்துடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் குய்டோ இவ்வாறு தெரிவித்தார்.
குய்டோ வெஸ்டர்வெலே ஜெருசலத்ததின் ஆலிவ்ஸ் மலைப்பகுதியில் முதலில் தனது பயணத்தை துவக்கினார். பின்னர் அவர் பாலஸ்தீனர்கள் உள்ள மேற்குகரைப் பகுதிக்கு சென்றார். ஆக்கிரமிப்பு செய்த பகுதியில் இஸ்ரேல் குடியிருப்புகளை கட்டுவதற்கு ஜேர்மனி எதிர்ப்பு தெரிவித்தது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கு பகுதியின் அமைதியை பாதிக்கும் என்றும் ஜேர்மனி மீண்டும் வலியுறுத்தியது. குய்டோ வெஸ்டர்வெலேவுடன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் டிரிக் நெபல் சென்றுள்ளார்.
அவர்கள் செவ்வாய்க்கிழமை காசா திட்டுப்பகுதிக்கு சென்றார்கள். அங்கு பாலஸ்தீனர்களுக்கு உதவ கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. காசா திட்டுப்பகுதியில் பள்ளிகள் அமைக்க 30 லட்சம் யூரோ உதவி அளிக்கும் அறிவிப்பை நெபல் வெளியிட்டார்.

Thanks:Lankasri

No comments:

Post a Comment

المشاركات الشائعة