சமூக அபிவிருத்திக்கான உலமாக்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் உலமாக்களுக்கான ஒரு விஷேட பயிற்சிக் கருத்தரங்கு ஒன்றை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச கலாச்சார நிலையத்தின் இலங்கைக் கிளையுடன் இணைந்து நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என கருந்தரங்கு இணைப்பாளர் அஷ்-ஷைக் தையிப் ஹைதர் அலி தொவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் தொரிவிக்கையில்: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தவைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம்.ரிஸ்வி முஃப்தி அவர்களின் தலைமையில் நடவிருக்கும் இக்கருத்ரங்கு “இன்ஷா அல்லாஹ்” எதிர் வரும் சனி மற்றும் ஞாயிறு (25,26) தினங்களிள் கொழும்பு 10, மருதானை பூக்கர் வரவேற்பு மண்டபத்தில் காலை 8.45 முதல் மாலை 4.00 மணி நடைபெறும்.
இதன் விஷேட வளவாளராக சஊதி அரேபியா றாபிதாவின் இஸ்லாமிய கல்விக்கான சர்வதேச அமைப்பின் முன்னாள் செயலாளரும், அல்-முஸ்தவ்தஃ அல்-ஹைரின் கண்கானிப்பாளரும்,அவ்காப்ஃ அல்-றாஜியின் நம்பிக்கையானருமான அல்-உஸ்தாத் யஹ்யா இப்றாஹீம் அல்-யஹ்யா அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
அறபுப் பாஷையில் நடைபெவிருக்கும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்பும் உலமாக்கள் 0715213091 / 0773440801 என்ற இலக்கங்களினூடாக தொடர்பு கொண்டு தமது ஆசனங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு மேற்படி அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளா; அஷ்-ஷைக் எஸ்.எல்.எம்.நவ்பர் தொpவித்துள்ளார்.
-Lankamuslim-
No comments:
Post a Comment