இராணுவ முகாம்களில் வதிவிட தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் மாணவ மாணவியர் தொடர்பாக தற்போது முகாம்களில் சாதகமான நிலை ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம் அரசியல் வாதிகள் சிலர் தாம் பல மணிநேரம் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்காவை சந்தித்து இது பற்றி பேசியுள்ளதாகதாகவும் அதன் பின்னர் முஸ்லிம் மாணவர்களின் விடையம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ள தகவில் பிரதியமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் மிக நீண்ட நேரம் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்காவுடன் கலந்துரையாடிய பின்னர் முஸ்லிம் மாணவ மாணவியர்களுடைய பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பது எனவும், அவர்களுக்கான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது. மேலும் அந்த தகவலில் தற்பொழுது பல்கலைக்கழக மாணவர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல் தங்களது பயிற்சிகளை தொடர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது எனவே, இவ்விடயம் தொடர்பில் யாரும் இதனை அரசியலாக்க முனைவதோ அல்லது பல்கலைக்கழக மாணவர்களுக்காக வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சி தொடர்பாக விமர்சனங்கள் செய்வதையோ தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழுகை , இஸ்லாமிய உடை, ஹலால் உணவு, ஆண் பெண் கலந்த உடலியல் பயிற்சி என்பன முஸ்லிம் மாணவ மாணவியருக்கு உள்ள பிரச்சினையாக இருக்க இராணுவ முகாம்களில் பயிற்சி , மற்றும் அங்கு காணப்படும் அடிப்படையான வசதிகளில் உள்ள குறைபாடுகள் , மாணவியர் பலருக்கு வழங்கப்படும் உடல் பயிற்சி கடினமாக உள்ளமை போன்றவை பொதுவாக உணரப்படும் விடையமாக உள்ளது, முஸ்லிம் மாணவ மாணவியர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் இன்றும் உடல் பயிற்சி சில முகாம்களில் ஆண் ,பெண் கூட்டாகவும் சில முகாம்களில் தனியாகவும் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது.
இது தொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தில் பொது செயலாளர்பொறியலாளர் நிஷாத் அவர்களை lankamuslim.org செய்தி மற்றும் கட்டுரையாளர் M.ரிஸ்னி முஹம்மட் தொடர்பு கொண்ட போது அவர் தெரிவித்தவை இங்கு தரப்படுகின்றது அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் ஆகியன கடந்த மே மாதம் 22 ஆம் திகதி உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்காவை சந்தித்து பேசி முஸ்லிம் மாணவ மாணவியர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அவருக்கு விளக்கினோம்அதன் போது சாதகமாக பதிலளித்த அமைச்சர் இவ்வளவு பிரச்சினை உங்களுக்கு இருக்கின்றதா ? ஏன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்கள் இது தொடர்பாக என்னிடம் எதுவும் பேசவில்லை என்று கேள்வி எழுப்பியதுடன் நாம் பாராளுமன்றத்தில், பாராளுமன்ற சிற்றுண்டி சாலையில் சந்திக்கின்றோம் முஸ்லிம் அரசியல் வாதிகள் இது தொடர்பாக என்னிடம் எதுவும் பேசியதில்லை !! என்று தெரிவித்தார் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கா பேசிய விடையங்கள் எம்மிடம் வீடியோ பதிவுகளாக உள்ளது.
எம்மிடம் உள்ள ஆதாரங்கள் தகவல்களின் பிரகாரம் எந்த முஸ்லிம் அமைச்சரும் , பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் மாணவ மாணவியர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக எதுவும் நாம் பேசுவதற்கு முன்னர் பேசவில்லை என்பதை உறுதியாக கூறுகின்றேன், முஸ்லிம் மாணவர்களை வைத்து எவரும் அரசியல் செய்யக்கூடாது.
உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கா வதிவிட தலைமைத்துவ பயிற்சியை ஒழுங்கு செய்யும்போது சிரேஷ்ட அமைச்சர் பௌசியையும், ஆளுநர் அலவி மௌலானவையும் தொலைபேசியல் அழைத்து முகாம்களின் பயிற்சியாளர்களுக்கு சிறுபான்மை மாணவர்கள் தொடர்பாக ஒழுங்குகள் பற்றி கூறுமாறு தெரிவிக்கப்பட்டபோது சிரேஷ்ட அமைச்சர் பௌசி முகாம்களில் முஸ்லிம் மாணவர்களுக்கு ஹலால் உணவு வழங்க வேண்டும் என்று மட்டும் தெரிவித்துள்ளார்,ஆளுநர் அலவி மௌலானா அந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் , நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமிடமும், பாராளுமன்ற உறுப்பினர் காபீர் காசிம்முடனும், மற்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாசபையுடனும் தொடர்பு கொண்டிருந்தோம் ரவூப் ஹக்கீம் தனது செயலாளரின் ஊடாக உயர் கல்வி அமைச்சின் செயலாளரை தொடர்பு கொண்டுள்ளார்.
அவர் அமைச்சரை சந்திக்கவில்லை பாராளுமன்ற உறுப்பினர் காபீர் காசிம் அமைச்சர் சிரேஷ்ட அமைச்சர் பௌசியுடன் தொடர்பை ஏற்படுத்தி இந்த முஸ்லிம் மாணவர்கள் விடையத்தில் இனைந்து செயல்பட அழைப்பு விடுத்திருந்தார் நாங்கள் உயர் கல்வி அமைச்சரை சந்தித்ததன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் காபீர் காசிம் முஸ்லிம் மாணவ மாணவியர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசியிருந்தார்.
நாங்கள் உயர் கல்வி அமைச்சரை சந்தித்தபோது இந்த பிரச்சினைகள் என்னிடம் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தால் ஆண்களும் பெண்களுக்கும் வேறுவேறு முகாம்களில் பயிற்சிகளை ஏற்பாடு செய்திருப்பேன் அடுத்தவருடன் ஆண்களும் பெண்களுக்கும் வேறுவேறாக பயிற்சி நெறியை ஏற்பாடு செய்தால் உங்களுக்கு சரிதானே என்றும் வினவினார்
மேலும் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் பொது செயலாளர்பொறியலாளர் நிஷாத் தெரிவித்த தகவலில் மூன்று முகாங்களில் முஸ்லிம் மாணவ மாணவியர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் பெரும்பான்மையானவர்கள் ரந்தனிகள முகாமிலும் மற்றும் களுத்துறை , திருகோணமலை முகாம்களிலும் ஈடுபட்டுள்ளனர் களுத்துறை முகாமில் பெண்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்களில் 30 முஸ்லிம் பெண்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்களில் 28 முஸ்லிம் மாணவியர் அபாய உடையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் ஆனால் அங்கு இரண்டு முஸ்லிம் மாணவியர் ஒருவர் திருகோணமலையை சேர்ந்தவர் மற்றவர் மூதுரை சேர்ந்தவர் இவர்கள் டீ சேர்ட்டும் டவுசரும் அணிகின்றனர் இவர்களை பார்க்கும் பயிற்று விற்பாளர்கள் இவர்கள் அணியும்போது நீங்கள் ஏன் அணிவதில்லை என்று மற்ற முஸ்லிம் பெண்களை பார்த்து கேட்கும் நிலையில் இருக்கிறது.
உயர் கல்வி அமைச்சரை நாங்கள் சாதகமான முறையில் அணுகினோம் அவரும் எமக்கு சாதகமான முறையில் பதில் தந்துள்ளார் என்றும் தெரிவித்தார். தற்போது உடல் பயிற்சி பெரும்பாலும் ஒன்றாகவே நடைபெறுகின்றது என்பது குறிபிடத்தக்கது.
No comments:
Post a Comment