M.ஷாமில் முஹம்மட்
துருக்கியில் எதிர் வரும் 12-ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது ஜூன் 12-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தல் மூலம்மொத்தம் 550 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். கடந்த இரண்டு தடவையாக இஸ்லாமிய பின்னியை கொண்டுள்ள நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி -Justice and Development ஆட்சியில் அமர்ந்துள்ளது இதன் பிரதமராக ரஜப் தையிப் அர்பகான் விளங்குகின்றார்.
2001 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த கட்சி 2002 இல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 334 ஆசனங்களை கைப்பற்றி துருக்கியின் பிரதான கட்சியாக உருவெடுத்தது இந்த கட்சி 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராண்டாவது பாராளுமன்ற தேர்தலில் 341 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது தடவையாக போட்டியிடவுள்ளது இந்த தேர்தலில் 550 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகவுள்ளனர்.
நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் ஆட்சிகாலத்தில் துருக்கி பெரிதும் வளர்ச்சி கண்டுள்ளது உலகில் சீனாவுக்கு அடுத்ததாக மிகவும் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதரத்தை கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது. துருக்கியின் ஆள்வீத வருமானம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது ஆகவே இந்த கட்சி மீண்டும் வெற்றிபெறுமா ? அல்லது தோல்வியடையுமா ? என்ற கேள்விக்கு இடமில்லை என்றும் இந்த தடவை கட்சி பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மையை பெற்றுகொள்ளுமா ? என்பதுதான் வினா என்று துருக்கி அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக துருக்கியின் ஹுர்ரியத் பத்திரிகையின் பிரபல கட்டுரையாளர் Ahmet Hakan இவ்வாறு தெரிவித்துள்ளார் பிரதமர் ரஜப் தையிப் அர்பகான் தன்னை ஒரு மக்களின் ஹீரோவாக பார்க்கின்றார் ..அவருக்கு தெரியும் தன்னை விமர்சிப்பவர்களின் செல்வாக்கை விடவும் தனது செல்வாக்கியின் சக்தி பெரியது என்று அதனால் அவர் தன்னை விமர்சிப்பவர்களை கவனத்தில் கொள்வதில்லை என்று தெரிவிக்கின்றார்.
துருக்கிய தகவல்கள் பிரதமர் ரஜப் தையிப் அர்பகானின் செல்வாக்கு மேலும் வளர்ந்துள்ளதாக தெரிவிகின்றன ஆனாலும் கடந்த 2009 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலில் 2004 ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற வாக்குகளை விடவும் மூன்று வீதம் குறைவாக பெற்றுள்ளது என்பது குறிபிடத்தக்கது.
நடை பெறப்போகும் தேர்தலில் பிரதமர் தமக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தருமாறு மக்களிடம் கேட்டுள்ளார் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கட்சி பெற்றுகொள்ளுமாக இருந்தால் எவரின் உதவியும் இன்றி துருக்கிய யாப்பை மாற்றமுடியும் என்பது குறிபிடதக்கது.
கடந்த 2007 ஆம் ஆண்டு நடை பெற்ற பாராளுமன்ற தேர்தலில் துருக்கியில் பிரதான அரசியல் கட்சிகளான Justice and Development Party -AKP- 46.66 வீதமான வாக்குகளை பெற்று 341 ஆசனங்களையும், Republican People’s Party -CHP- 20.85 வீதமான வாக்குகளை பெற்று 112 ஆசனங்களையும், Nationalist Movement Party -MHP- 14.29 வீதமான வாக்குகளை பெற்று 71 ஆசனங்களையும் கைப்பற்றியது.
ஏனைய கட்சிகள் 10 வீதமான வாக்குகளை விடவும் குறைவாக பெற்றமையால் அவர்களின் வாக்குகள் துருக்கியின் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு பெற்ற ஆசனங்களில் வீதாசாரத்துக்கு அமைய பிரித்து வழங்கப்பட்டது.
கடந்த 2007 ஆம் ஆண்டு நடை பெற்ற பாராளுமன்ற தேர்தலில் Nationalist Movement Party -MHP- 14.29 வீதமான வாக்குகளை பெற்றிருந்தது தற்போது இந்த கட்சி பலமான பாலியல் ஒழுக்க குற்ற சாட்டுகளை சுமந்துள்ளது இந்த கட்சின் உயர் மட்ட அரசியல் தலைவர்கள் தமது மாணவி அல்லாத பெண்களுடன் உடல் உறவில் ஈடுபடும் காட்சிகள் துருக்கியில் வெளியானதை தொடர்ந்து அந்த கட்சின் முக்கிய தலைவர்கள் 10 பேர் இரானினாமா செய்துள்ளனர்.
அவர்களின் பாலியல் லீலைகள் கட்சியை பெரிதும் பாதிக்கும் என்று தெரிவிக்கப்படும் நிலையில் நடைபெறபோகும் தேர்தலில் அந்த கட்சி 10 வீத வாக்களை விடவும் குறைவாக பெற்றால் தேர்தல் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு அதன் வாக்குகள் ஏனைய வெற்றி பெற்ற கட்சிகளுக்கு பிரித்து வழங்கப்படும் என்பது குறிபிடதக்கது இது பிரதமர் அர்பகானின் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பமை பெறுவதற்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.
ஆனால் நடைபெறபோகும் தேர்த்தில் இடது சாரிகள் பழமைவாத கடும்போக்கு தேசியவாத கட்சிகளுக்கு தமது வாக்குகளை வழங்கவுள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன துருக்கியில் இடது சாரிகள் சிறிய வாக்கு வங்கியை கொண்டிருந்தாகும் தந்திரோபாய வாக்களிப்புகள் பிரதமர் அர்பகானின் கட்சி பெற முயற்சிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு சவாலாக பார்க்கப்படுகின்றது.
பிரதமரின் ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற 367 ஆசனங்களை கைப்பற்றவேண்டும், அதாவது தற்போது உள்ள 341 ஆசனங்களை விடவும் மேலதிகமாக 26 ஆசனங்களை பெறவேண்டும் என்பது அவருக்கு பெரும் சவாலாக உள்ளது. ஆளும் தரப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுகொள்ளுமாக இருந்தால் துருக்கியில் புதிய அரசியல் யாப்பு வரையும் அதன் கனவு நினைவாகும் அதன் மூலம் துருக்கியில் இஸ்லாமிய நடைமுறைகளுக்கு இருக்கும் தடைகள் நீக்கபடும் என்பதை மட்டும் இப்போது கூறலாம்.
எஞ்சியிருந்த இஸ்லாமிய கிலாபத் 3.3.1924 ஆம் ஆண்டு துருக்கியில்தான் மேற்கு சக்திகளினால் அழிக்கப்பட்டது இப்போது அங்கு மீண்டும் இஸ்லாமிய அரசியல் எழுச்சி பெற்றுவருகின்றது என்பது குறிபிடதக்கது.
கந்த சில நாட்களாக துருக்கியில் எதிர் கட்சிகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன இதில் ஒருவர் கொல்லபட்டுள்ளார் மேற்குலகின் நேரடி பொருளாதார உதவியுடன் பல அமைப்புகள் கட்சிகள் என்பனவும் துருக்கியில் செயல்பட்டு வருகின்றன.
தற்போது பதவியில் இருக்கும் ஆளும் தரப்பு இஸ்ரேலுடன் நேரடியாக இராஜதந்திர மோதல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிபிடதக்கது பிரதமர் அர்பகானின் வெற்றியை சிதைக்க மேற்கின் பெரும் சக்திகள் களத்தில் மிகவும் நுட்பமாக வேலைசெய்கின்றது என்று எந்தவிதமான ஆதாரங்களும் இன்றி சொல்லமுடியும் அந்தளவுக்கு மேற்கு மற்றும் இஸ்ரேலிய சியோனிச சக்திகள் மிகவும் வெறுப்புடனும் பயத்துடனும் அணுகும் கட்சியாக நீதிக்கும் அபிவிருத்திக்குமான இந்த கட்சி இருக்கிறது.
No comments:
Post a Comment