Search This Blog

Jun 20, 2011

அளவெட்டித் தாக்குதலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம்


அளவெட்டியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரசாரக் கூட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. என்று அதன் செயலாளர் நாயகம் ஹசன் அலி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றது
அந்த கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் அதிகளவு தேர்தல் வன்முறைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முகம் கொடுத்தது
இந்த வகையில் நாம் இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதுடன், தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தும்படி அரசை வலியுறுத்துகின்றோம். இதுபோன்ற சம்பவங்கள் சர்வதேச ரீதியில் மேலும் இலங்கை மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

المشاركات الشائعة