Search This Blog

Jun 2, 2011

முஸ்லிம்களும் பேச்சு வார்த்தையும்


ஏ. அப்துல்லாஹ்: 
இனப்பிரச்சினை தொடர்பான அரசுக்கும் தமிழர் தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிகளின் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தி வருகின்றது இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தமிழர் தரப்பினருடன் மட்டும் பேச்சுக்கள் நடத்துவதன் மூலம் முழுமையான தீர்வு ஒன்றை எட்ட முடியாது என்று பலரும் சுட்டிக்காட்டியிருப்பதையடுத்து இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்துடனும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருடனும் பேச்சுக்கள் நடத்துவதற்குத் தாங்கள் தீர்மானித்திருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்தது.
அதேவேளை இனபிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக அரசாங்கம் முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த தீர்மானித்துள்ளது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்து தீர்வு தொடர்பாக முஸ்லிம் கட்சிகளுடனும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென விடுத்த வேண்டுகோளையடுத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்துமாறு ஜனாதிபதி அரச பேச்சுவார்த்தை குழுவுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இடம்பெற்றுவந்த பேச்சுவார்த்தைகளில் 6 சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளது நிலையில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படவில்லை. இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையின்போது அவர்களின் அபிலாசைகளும் பிரதிபலிக்கப்பட்டே அரசியல் தீர்வு தயாரிக்கப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கில் தமிழ் மக்கள் தமது ஏக பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தெரிவுசெய்தார்களோ அதேபோன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை முஸ்லிம் மக்கள் தெரிவுசெய்துள்ளனர். இதன் காரணமாக நாங்கள் முஸ்லிம் காங்கிரசுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டுவருகின்றோம். அரசிடம் இருந்து தீர்வைப்பெரும்போது அதில் முஸ்லிம்களும் பங்காளியாக இருப்பார்கள் அவர் தெரிவித்துள்ளார்
நடந்து முடிந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான 6 சுற்று பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் தரப்பில் அரசின் பிரதிநிதிகளாகவோ, முஸ்லிம் சமுகத்தின் பிரதிநிதிகளாகவோ எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிபிடத்தக்கது.

No comments:

Post a Comment

المشاركات الشائعة