Search This Blog

Jun 7, 2011

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையால் பலர் கொல்லப்பட்டுள்ளனர்


 ஆக்கிரமிப்பு அரசான இஸ்ரேல் கோலன் குன்று பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை நேற்று முன்தினம் நடத்திய வெறியாட்டத்தில் 23 க்கும் மேற்பட்ட சிரியா நாட்டு பலஸ்தீன ஆதரவாளர்கள் கொல்லப்பட்துள்ளனர் மேலும் 350 பேர் அளவில் காயமடைந்தனர் என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அல்குத்ஸ் – பைத்துல் முகத்தஸ் – இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு 44 ஆண்டுகள் பூர்த்தியை நினைவு கூறும் முகமாக நேற்று அரபு முஸ்லிம் நாடுகளிலும் ஏனைய பல நாடுகளையும் இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆர்பாட்டங்கள் பேரணிகள் , கண்ட கூட்டங்கள் என்பன நடைபெற்றுள்ளது

பலஸ்தீன் வாலிபர் அமைப்பு -The Muslim Youth Association- நாடு பூராவும் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றை நடாத்துமாறு பலஸ்தீன மக்களை கோரியிருந்தது நேற்று ஜூன் மாதம் 6 ஆம் திகதி பலஸ்தீன் கிழக்கு ஜெருசலத்தில் அமைந்துள்ள அல் குத்ஸ் – பைத்துல் முகத்தஸ்- முஸ்லிம் உம்மாஹ்வின் முதல் கிப்லா,  ஜெருசலம், மேற்கு கரை ஆகியன 1967 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது
கோலன் ஹைட்ஸ் பகுதியை 1967 ஆம் ஆண்டு சிரியாவிடம் இருந்து இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளை தமது காணிகளையும் வீடுகளையும் பறிகொடுத்த மக்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு எல்லையில் ஒன்றுதிரண்டு பலஸ்தீன ஆதரவு கோஷங்களை எழுப்பியதோடு தமது ஆக்கிரமித்த காணிகளை தமக்கு தருமாறு கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதன் போது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை இவர்கள் மீது வெறியாட்டம் நடாத்தியுள்ளது இதன்போதே இவர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்
தமது நிலத்தையும் வீடுகளையும் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களை நோக்கி இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை அந்த மக்களை விலகி போகுமாறு மிரட்டியுள்ளது , தமது காணிகளுக்கு போக முயன்றவர்களை எல்லையை மீறி வரவேண்டாம் என்றும் அவ்வாறு வந்தால் கொல்லப்படுவீர்கள் என்றும் ஒலிபெருக்கி மூலம் மிரட்டியுள்ளது ஆனால் அந்த மிரட்டலையும் மீறி காணிகளை பறிகொடுத்த மக்கள ஆக்கிரமிப்பு எல்லைக்குள் நுழைய முயன்றபோது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை அவர்களில் மீது கொலை தாண்டவம் ஆடியுள்ளது இதில் புதைத்து வைக்கபட்டுள்ள கன்னி வெடியில் சிக்கியும் , துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்  கொல்லப்பட்டுள்ளனர்
அதேவேளை சிரியாவில் இடம் பெறும் மனித உரிமை மீறல்களை மறைக்கவே சிரியா அரசு இவ்வாறான செயலில் ஈடுபடுவதாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையின் பேச்சாளர் அவிடால் லைலோவிக் தெரிவித்துள்ளார் கொல்லப்பட்டவர்கள் 10 பேர் என்றும் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் 13 முகாம்களில் சுமார் 5 இலட்சம் பலஸ்தீனர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சிரியாவில் கடந்த மாதமும் சட்டவிரோத இஸ்ரேல் இஸ்தாபிக்கப்பட்டு 63 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இஸ்ரேல் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற ஆர்பட்டன்க்ளில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கொல்லப்பட்ட தினத்தை பலஸ்தீன் காஸா நிர்வாகம் நேற்று துக்க நாளாக அறிவித்துள்ளது.
வீடியோ பார்க்க: BBC  செய்தியையும் கேட்டு பாருங்கள்  

No comments:

Post a Comment

المشاركات الشائعة