இலங்கை அரசுக்கும் சவூதி அரேபியாவுக்குமிடையில் நீண்ட காலமாக உறவு நிலவி வருகின்ற நிலையில் அந்த உறவை மேலும் பலப்படுத்தி இலங்கையில் முதலீடுகளையும் பல்வேறுபட்ட பொதுச் சேவைகளையும் நோக்காகக் கொண்டு சவூதி அரேபியாவைச் சேர்ந்த உயர்மட்ட குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
இக்குழுவினர் வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பாகவும், வடகிழக்கு புனர்வாழ்வு தொடர்பாகவும், வடகிழக்கில் அழிக்கப்பட்ட பள்ளிவாசல்களை கட்டியெழுப்புவது தொடர்பாகவும் அமைச்சர்களோடும் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரநிதிகளோடும் ஏனைய அமைப்புக்களோடும். கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர். மேலும் விதவைகள், அநாதைகள் போனறோர் தொடர்பில் வசேட கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மகளிர் மற்றும் சிறுவர் விவகாரத் துணை அமைச்சருமான, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இந்த குழுவுடன் கலந்துரையாதியுள்ளார்
No comments:
Post a Comment