Search This Blog

Jun 25, 2011

வெதுப்பகத்தில் தனது குழந்தையை போட்டு கொலை செய்த அமெரிக்கத் தாய்


ஏ.அப்துல்லாஹ்:அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தின் சாக்ரமென்டோ நகரில் ஒரு தாய் தனது குழந்தையை மைக்ரோவேவ் அவனில் -வெதுப்பகத்தில்- வைத்து மூன்றாவது டிக்ரீ – 3rd degree burn- வரை  வெதும்ப செய்யது கொலை செய்துள்ளார். தான் பெற்று 6 வாரங்களே ஆன தனது குழந்தை அழுது கொண்டே இருந்த காரணத்தால் மைக்ரோவேவ்  வெதுப்பகத்தில் போட்டு கொலை செய்துள்ளார் இந்த கொலை அமெரிக்காவில் அறியப்பட்ட மூன்றாவது மைக்ரோவேவ் வெதுப்பக குழந்தை படுகொலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு காரணமான தனது நண்பர் தொடர்பை துண்டித்தமையால் குழந்தையின் அருமை தாய் இந்த நாகரீக ! முடிவை எடுத்துள்ளார். 29 வயதான கா யேன்ங். என்ற இந்த அமெரிக்க பெண் தற்போது கைதாகியுள்ளார் கடந்த மார்ச் 17ஆம் தேதி இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
ஆனாலும் கடந்த மூன்று மாதகாலமாக குழந்தையின் மரணம் தொடர்பாக விசாரித்து வந்த அமெரிக்க போலீஸ் இவரை நேற்று கைது செய்துள்ளது குழந்தையைக் கொன்ற பின்னார் அல்லது கடுமையாக தாக்கிய பின்னர் குழந்தையை மைக்ரோவேவ் அவனில் வைத்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவிகின்றனர் இதே போன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் 2007 ஆம், 2008 ஆம் ஆண்டுகளிலும் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவங்கள் மேற்கு நாகரீகத்தின் அறுவடைகளாகத்தான் பார்க்கப்படுகின்றது, மேற்கு நாகரீகத்தின் குடும்பம் என்ற நிறுவனம் முற்றாகவே அழிந்து விடும் ஆபத்தில் உள்ளது அமெரிக்க ஆய்வுகளின் பிரகாரம் அமெரிக்காவில் 85 வீதமானவர்கள் திருமணம் முடிப்பதில்லை அந்த 85 வீதமான ஆண்களும் பெண்களும் ஆண் பெண் என்ற நண்பர்களுடன் உறவு கொண்டுவருகின்றனர்.
அந்த Girlfriend , Boyfriend  என்ற உறவும் பல காலம் நீடிப்பதில்லை குறைந்தது 5 வருடத்துக்கு ஒரு பெண் பல ஆண் நண்பர்களுடன் உறவு கொள்கின்றாள் அதேபோன்ற ஆணும் பல பெண்களுடன் உறவு கொள்கின்றான் இந்த உறவுகளின் போது முடியுமான வரை குழந்தை உருவாவதை தவிர்த்து கொள்கின்றனர். மீறி உருவானாலும் அதில் 48 வீதமான குழந்தைகளுக்கு அப்பா யார் என்பது தெரியாத நிலையில் தாய் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றது.
அங்கு 15 வீதமானவர்கள் மட்டும்தான் திருமணம் முடித்து குடும்பமாக வாழ ஆரம்பிக்கின்றனர் என்றாலும் அவர்களின் நாகரீகத்தின் விளைவாக அந்த 15 வீதத்திலும் 48 வீதமானவர்கள் விரைவான விவகாரத்து செய்து கொள்கின்றனர் இதன் காரணமாக அமெரிக்காவில் 7 வீதமானவர்கள்தான் குடும்பமாக  பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றனர் இந்த அநாகரிகத்தின் விளைவைத்தான் இன்று அமெரிக்காவிலும் ஏனைய மேற்கு நாடுகளிலும் நாம்  கண்டும் கேட்டும் வருகின்றோம் மேற்கு நாகரீகம் விரைவாக தனது கல்லறைக்குள் படுத்து கொள்ளும் என்று எதிர்பார்களாம்.
-lankamuslim-

No comments:

Post a Comment

المشاركات الشائعة