Search This Blog

Jun 19, 2011

முஸ்லிம் அரசியல் நிலையை காரணம் காட்டி எவரும் முஸ்லிம்களின் உரிமைகளை புறக்கணிக்க முடியாது



முஸ்லிம்கள் தரப்பில் இருக்கும் அரசியல் பலவீனங்களை காரணமாக காட்டி அரசாங்கமோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது வேறுயாருமோ முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளை உரிமைகளை புறக்கணிக்க முடியாது இலங்கையில் பொதுவாக எல்லா கட்சிகளும் -சிறுபான்மை – பலவீனமாகவே உள்ளது அதனை காரணமாக காட்டி முஸ்லிம்களுக்கு கொடுக்கப்படவேண்டிய உரிமை எந்தவகையிலும் மறுக்கப்படமுடியாது என்று பிரிட்டனை தளமாக கொண்டியங்கும் தீபம் தொலைகாட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் கலந்துகொண்டு கருத்துரைத்துள்ள அஷ் ஷெய்க் நஜா முஹம்மத் ( இஸ்லாஹி) தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள இந்த நேரத்தில் நீண்ட காலத்தில் இலங்கை நிரந்தரமான ஒரு சமாதானத்தை அடைய வேண்டுமானால் நிச்சயமாக அரசாங்கம் தீர்வொன்றை கொடுக்கவேண்டும்.
வரலாற்றை பார்க்கின்றபோது எந்த பேச்சுவார்த்தையிலும் வடக்கு கிழக்கு முஸ்லிம்களை பொறுத்தவரையில் குறிப்பாக கிழக்கு மாகாண த்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பாக சரியான நிலைப்பாட்டை தமிழ் தலைமைகள் கொண்டிருக்கவில்லை.
 பண்டா செல்வா ஒப்பந்தம் முதல் இறுதியாக இடம்பெற்ற ரணில் புலிகள் ஒப்பந்தம் வரையும் முஸ்லிம்களின் உரிமைகள் -இருப்பு- தொடர்பாக சரியான நிலைப்பாட்டை தமிழ் தலைமைகள் கொண்டிருக்கவில்லை இதன்காரணமாகவே அரசு தமிழ் தரப்பு பேச்சின் போது முஸ்லிம்கள் உள்வாங்கப் படவேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம் தரப்பில் முன்வைக்கப்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.
அங்கு எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசும்போது இவ்வாறு கருத்துரைத்துள்ளார் இந்த நிகழ்ச்சியை இங்கு பார்க்க முடியும்.

No comments:

Post a Comment

المشاركات الشائعة