Search This Blog

Jun 20, 2011

மன்னாரில் பெற்றோலிய ஆய்வுக்கு இந்தியா ,சீனாவுடன் , ரஷ்யாவும்


மன்னாரில் கேஸ் மற்றும் எண்ணெய் ஆய்வுக்கு ஒத்துழைப்பை வழங்க உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு – GAS- நிறுவனங்களில் ஒன்றான ரஷ்ய நாட்டு கேஸ்பிறோம் -Gazprom- நிறுவனம் முன்வந்துள்ளது நிறுவனத்தின் தலைவர் அலெக்சி மில்லர் -Alexei Miller- தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு தனது கம்பனியின் நிபுணர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அலெக்சி  தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவு டன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அலெக்சி மில்லர் (Alexei Miller) தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார் ஜனாதிபதியின் ரஷிய விஜயதின்போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது .
மன்னார் பிரதேசத்தில் எதிர் வரும் ஓகஸ்ட் மாதம் எண்ணெய் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று கனிய வளங்கள் அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளது அவைகள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒப்பந்த அடிப்படையில் ஆய்வு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளன முதல் கட்டமாக மூன்று எண்ணெய் கிணறுகள் தோண்டபடவுள்ளது.
மன்னார் பிரதேசத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் கொண்ட எட்டு இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன பிரதேசத்தில் எண்ணெய் வளப்படுகையை பொருத்து மேலதிக கிணறுகள் தோண்டப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிபிடதக்கது 
-Lankamuslim-

No comments:

Post a Comment

المشاركات الشائعة