ஏ. அப்துல்லாஹ்
மீள் குடியேற்றம் அதனுடன் தொடர்பான யாழ்ப்பாண மற்றும் கிளிநொச்சி முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளன பிரதிநிதிகளுக்கு மிடையிலான சந்திப்பு ஒன்று இன்று புதன்கிழமை 22 ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
மீள் குடியேற்றம் அதனுடன் தொடர்பான யாழ்ப்பாண மற்றும் கிளிநொச்சி முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளன பிரதிநிதிகளுக்கு மிடையிலான சந்திப்பு ஒன்று இன்று புதன்கிழமை 22 ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் , அமைச்சர் பஷீர் சேகு தாவூத், பாராளுமன்ற உறுப்பினர்களான ஹஸன் அலி, பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக், ஆகியோர் கலந்துகொண்துள்ளனர் இந்த சந்திப்பு யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் வேண்டுகோளின் பேரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது விரிவாக
இதன் போது யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளன பிரதிநிதிகளினால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது அவற்றில் முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பாக தெளிவான அரச கொள்கை, யாழ்ப்பாண முஸ்லிம்களின் வாக்குரிமை, மீள் குடியேற்ற ஊக்குவிப்பு தொகை மற்றும் நிவாரணம்
பயங்கரவாத யுத்தம் காரணமாக விற்கப்பட்ட முஸ்லிம் காணிகளை மீளப்பெறுவதற்கான சட்ட உதவி ,தற்போது வாழ்ந்து வரும் பிரதேசங்களில் இலகுவாக காரியங்களை செய்வதற்கான விசேட ஏற்பாடு, குடியேறியுள்ள முஸ்லிம்களுள் அதிகமானவர்கள் பழைய இரும்பு வியாபாரத்தில் ஈடுபடுவதால் அதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க ஏற்பாடு , தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகளையும் முஸ்லிம் மீள் குடியேற்றத்துக்கு உதவும் முகமாக முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகள் அவர்களை அணுகுதல் ஆகிய ஏழு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் கருத்துரைத்துள்ள நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் முதற்கட்டமாக பாராளுமன்றத்தில் கவனயீர்ப்பு பிரேரனையொன்றினை பாராளுமன்ற அமர்வில் முன்வைப்பதாக உறுதியளித்துள்ளதுடன் முன்வைக்கப் பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பதிவு விடயத்தில் தேர்தல் ஆணையாளருடன் ஏற்கனேவே நாம் தொடர்புகொண்டு பேசியுள்ளோம் என்றும் மேலும் இது தொடர்பாக பேசுவதாகவும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக விசேட சட்டமூலமொன்றினை தயாரித்து பாராளுமன்றத்தில் முன்வைக்க ஆலோசிப்பதாகவும், மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் செயற்படுகின்ற மாவட்டக்குழுவில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளைனப் பிரதிநிதிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment