- M.ரிஸ்னி முஹம்மட்
- OurUmmah-
எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் மிகவும் கட்டுகோப்பான ஒரு இஸ்லாமிய அரசியல் இயக்கமாக செயல்பட்டு வந்துள்ளது இதன் அரசியல் நடவடிக்கைகள் என்பது அதன் ஒரு பகுதி மட்டுமே அரசியலுக்கு அப்பால் அந்த சர்வதேச இஸ்லாமிய இயக்கம் எகிப்திய மக்களின் உள்ளங்களில் மிகவும் ஆழமாக ஊடுருவியுள்ளது.
எகிப்தில் ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஒடுக்குமுறை ஆட்சி காலத்தில் ஹுஸ்னி முபாரக் அரசாங்கத்தால் மிகவும் மோசமாக ஒடுக்கப்பட்டவர்கள் இவர்கள்தான் அப்படியிருந்தும் பலமானதும் ஒழுங்கமைக்கப்பட்ட மிகவும் கட்டுகோப்பான அமைப்பாக எழுந்து நிற்கின்றது இதன் வளர்ச்சியை சகித்துகொள்ளமுடியாத இஸ்ரேல் மற்றும் மேற்குலகம் இந்த இஸ்லாமிய இயக்கத்தை மக்களின் உள்ளங்களில் இருந்து அகற்றவும் , அதை பலவீனபடுத்தவும் பலவீனமாக காட்டவும் பல வழிமுறைகளில் செயல்பட்டு வருகின்றது.
இதற்கு முதல் படியாக எகிப்தின் இஸ்லாமிய விரோத அல்லது மேற்கு அரசியல் நடைமுறைகளை ஆதரிக்கும் ஊடகங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளது என்று பல அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துவருகின்றனர்.
இஸ்ரேலும் மேற்கு சக்திகளும் துருக்கியில் இஸ்லாமிய பின்னணியை கொண்டுள்ள நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியை பலவீனமாக காட்டவும் அது முடியாத போது அதன் தலைவர்களை கொலை செய்யவதற்கு முயற்சித்து வருவது போன்றும் ஈரானில் உள்நாட்டு கிளர்ச்சியை தூண்டவும் அதன் தலைவர்களை புத்திஜீவிகளை படுகொலை செய்துவருவது போன்ற நடைவடிக்கைகளை எகிப்திலும் மேற்கொள்ள இஸ்ரேல் மற்றும் மேற் சக்திகள் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
இந்த சந்தர்பத்தில் இஸ்ரேலின் துணை வெளிநாட்டு அமைச்சர் டன்னி அய்லோன் கடந்த மார்ச் மாதம் தெரிவித்த கருத்தை நினைவு படுத்துவது மிகவும் பொருத்தமாக இருக்கும் ‘எகிப்தில் அமையபோகும் எதிர்கால அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு இருப்பதை இஸ்ரேல் எதிர்க்கும் என்றும் எகிப்தின் எந்தவொரு தேர்தலிலும் இஹ்வானுல் முஸ்லிமீன் பங்குகொள்ளவதை தடை செய்ய இஸ்ரேல் வேலைசெய்யும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த கூற்றையும் இன்று எகிப்தில் மேற்கு சார்பு ஊடகங்கள் மேற்கொண்டுவரும் பொய் மற்றும் மிகைப் படுத்தப்பட்ட தகவல் யுத்தத்தையும் ஒப்பிடும் ஒருவருக்கு இஸ்ரேல் மற்றும் மேற்குலகின் எகிப்து ஊடகத் துறை மீதான ஆழ ஊடுருவளை விளங்குவது இலகுவாக இருக்கும்.
தற்போது அதன் முதல் கட்டமாக எகிப்தின் சில ஊடகங்களை இஸ்ரேல் மற்றும் மேற்கு சார்பு சக்திகள் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக தெரிகின்றது இந்த வகையில் .almasryalyoum என்ற அரபு ஆங்கில பத்திரிகை மற்றும் இணையத்தள ஊகம் , Al-Fagr newspapera என்ற அரபு பத்திரிகை மற்றும் இணையத்தள ஊகம் ஆகியன உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வருவதாக எகிப்தின் பல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனமை இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
அதேவேளை இஹ்வானுல் முஸ்லிமீன் தான் almasryalyoum பத்திரிகையை முழுமையாக புறக்கணிப்பதாகவும் அது உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளது , எகிப்திய இடைக்கால இராணுவ நிர்வாகம் Al-Fagr newspapera பத்திரிகை உண்மைக்கு புறம்பான பொய்யாக சோடிக்கப்பட்ட தகவல்களை பத்திரிகையில் வெளியிட்ட குற்றச்சாட்டியில் அதன் பிரதம ஆசிரியரை கைது செய்து இராணுவ இன்று நீதிமன்றில் நிறுத்தியுள்ளது.
உலகின் இஸ்லாமிய சக்திகளை பலவீனபடுத்த பல வழிகளிலும் மேற்கும், மேற்கு சார்பு சக்திகளும் முயன்று வருகின்றது இந்த வகையில் எகிப்திலும் இஸ்லாமிய சக்திகளை பலவீனமாக காட்டவும் பலவீனப்படுதவும் முதலில் ஊடகத்தையே அவை பயன்படுத்துகின்றது இஹ்வானுல் முஸ்லிமீன் பிளவு பட்டுள்ளதாக காட்ட “divisions within the Brotherhood” என்ற வசனங்களை திரும்பத்திரும்ப உபயோகித்து வருவதாகவும் அதில் எந்த உண்மையும் இல்லை என்று இஹ்வான் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
எகிப்தில் பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்கள் நெருங்கிவரும் வேளையில் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பை மிகவும் உடைந்து போகும் ஒன்றாக மக்களுக்கும் சித்தரிக்கும் வேலையை செய்துவருவதாக அதன் உறுப்பினர்கள் பரவலாக கருத்துரைத்துள்ளனர். இது இஸ்லாத்தை விரும்பாத மேற்கின் நிழலில் இருக்கும் சக்திகளில் ஊடக யுத்தம் என்றும் அவர்கள் வர்ணித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இஹ்வானுல் முஸ்லிமீன் டாக்டர் அப்துல் மொனிம் அபுல் பதூஹ் என்பவரை தனது அமைப்பில் இருந்து நீக்கியுள்ளது இஹ்வான் தான் ஜனாதிபதி தேர்தலில் எவரையும் வேட்பாளராக களத்தில் இறக்காது என்ற அதன் தீர்மானத்தை மீறி இவர் தன்னை சுதந்திரமான ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தமையை தொடர்ந்து இவரின் உறுப்புரிமையை நீக்கி வெளியேற்றியுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து மேற்கு ஊடகங்கள் மற்றும் மேற்கு சார்பு எகிப்திய ஊடகங்கள் “divisions within the Brotherhood” என்ற வசனங்களை திரும்பத்திரும்ப உபயோகிக்க தொடங்கியுள்ளன இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் டாக்டர் அப்துல் மொனிம் அபுல் பதூஹ்விக்கு எதிரான தீர்மானத்தை பெரும்பாலும் அதன் உருப்பினர்களும் ஆதரவாளர்களும் அதற்கு ஆதரவாகவே கருத்துரைத்துள்ளனர் எனினும் சிலர் இந்த தீர்மானம் அமைப்புக்கு சாதகமான பெறுபேறுகளை பெற்றுத்தருமா என்ற கேள்வியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இன்னும் சிலர் ஜனாதிபதி தேர்தலில் இஹ்வான் தான் வேட்பாளர்களை நிறுத்தாது என்ற தீர்மானத்தை மீளாய்வு செய்யவேண்டும் என்றும் கேட்டுள்ளனர் மேற்கு மீடியாக்கள் சில இந்த தீர்மானம் இஹ்வானுல் முஸ்லிமீன் பிளவு படுவதற்கான அறிகுறி என்றும் அதன் அழிவு நெருங்க ஆரம்பித்துள்ளதை காட்டுவதாகவும் எழுதியுள்ளது இந்த செய்திகளை கண்டித்துள்ள அந்த அமைப்பு இது சாதாரண நிர்வாக தீர்மானம் என்றும் இந்த நேரத்தில் அமைப்பு தேசிய ஒருமைபாட்டிற்கும் அமைப்பின் அடிப்படை யான வேலைகளின் மீதும் கவனம் செலுத்துவதாகவும் அதனால் ஜனாதிபதி தேர்தலில் யாரையும் நிறுத்தாது என்றும் யாரையும் ஆதரிக்காது என்றும் அறிவித்துள்ளது.
இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் சமூகத்துடன் முழுமையாக கழந்து சமூகத்தின் ஒவ்வொரு சிறிய பெரிய விடையங்களிலும் முனைப்புடன் ஈடுபடும் பல சகாப்த வரலாற்றை கொண்டது எகிப்து சமூகத்துக்கு தேவைகள் ஏற்படும்போதெல்லாம் அது முதல் உதவியாளனாக நின்றுள்ளது இவற்றை அது அரசியல் நோக்கம் கருதி செய்யவில்லை இஸ்லாமிய கோட்டபாட்டுக்கு அமைவாக எந்த அரசியல் எதிர்பார்ப்பும் இல்லாத இபாதத்தாக கருதி மட்டும் அவற்றை அது செய்துவந்துள்ளது மக்களின் உள்ளங்களில் மிகவும் உயர்வான இடத்தை பெற்றுள்ளது.
அந்த இயக்கம் பல சகாப்த கால மக்கள் சேவையை அரசியல் நோக்கியில் செய்திருந்தால் இன்று முழுமையாக அரசியல் அதிகாரத்தை இஹ்வான்கள் பெற்றிருந்திருக்க முடியும் என்ற கருத்துகளும் உண்டு. டாக்டர் அப்துல் மொனிம் அபுல் பதூஹ் நீக்கப்பட்டமை ஒரு நிறுவனம் எப்படி தனது நிர்வாகத்துக்கு உட்பட்ட ஒருவர் நிர்வாக ஒழுங்குகளை மீறும்போது அந்த நிறுவனத்தை விட்டும் நீக்கப்படுகின்ராரோ அதே நடைமுறைதான் இங்கும் இடம்பெற்றுள்ளது என்பதாக தெரிவித்துள்ளது
அதேவேளை ஜனநாயக முறையிலான தேர்தல் அதன் ஊடாக பாராளுமன்றம், ஜனாதிபதித்துவம் என்பதை முழுமையாக நிராகரிக்கும் ஹிஸ்புத்தஹ்ரீர் போன்ற ஏனைய அமைப்புகள் இதனை தொடரப்போகும் பலவீனங்களாகவே பார்க்கும் என்பதில் சந்தேகமில்லை இந்த பார்வை எதார்த்தமானதா அல்லது மாய வசனங்களில் தாக்கமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் .
No comments:
Post a Comment