Search This Blog

Jun 2, 2011

இஸ்ரேலிய செய்த்தான் வேதம் ஓதுகின்றது !


S.M.அப்துல்லாஹ்
இஸ்ரேலின் இந்தியா மற்றும் இலங்கைக்கான தூதுவர் மார்க் சோபர்-Mark Sofer -  ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை மனித உரிமைகளை அடிப்படையாக  கொண்டது அல்லது அது வெறும் அரசியல் வெளிப்பாடுகளை கொண்டது என்று தெரிவித்துள்ளார். புது டில்லியை தளமாக கொண்டு இயங்கும் இஸ்ரேலின் இந்தியா மற்றும் இலங்கைக்கான தூதுவர் நேற்று கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்துப் பேசிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர்  ஐநா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கை மனித உரிமை பற்றிய அக்கறையால் உருவானதல்ல. அது முற்றுமுழுதான அரசியல் நோக்கம் கொண்டது. என்று தெரிவித்துள்ளார் இதேவேளை கடந்த மே மாதம் முதலாம் வாரம் இலங்கை வந்திருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒன்றல்ல என்று  தெரிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.
ஊடகவியலாளர்கள் மத்தியில்  கருதுரைதுள்ளன  மார்க் சோபர் இந்த ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை போன்றுதான் காஸா மோதல் குறித்து கடந்த 2009 ஆம் ஆண்டில் ஐ.நா. வெளியிட்ட கிளாஸ்ரன் அறிக்கையில் இஸ்ரேல் யுத்த குற்றம் இழைத்தது என குறிப்பிட்டது  என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு   473 குழந்தைகள், 126 பெண்கள் உட்பட 1594 பலஸ்தீனர்களை காஸா மீதான யுத்தத்தின் போது  இஸ்ரேல்  படுகொலைசெய்தது  அதில்  1460 பேர் காஸா மீதான அத்துமீறிய ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போதும், ஏனைய   134 பேர் பலஸ்தீன் ஏனைய பகுதிகளிலும்  இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளால் படுகொலை செய்யபட்டனர்  என்பது குறிபிடத்தக்கது.
இஸ்ரேல் பலஸ்தீன்   காஸா  பிரதேசத்தில் நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவையில்   ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை  தூதுவர் தயான் ஜெயதிலக்க தெரிவித்த கருத்துக்கள் பாலஸ்தீன மக்கள் சார்பாகவும் இஸ்ரேல் அரசுக்கு எதிராகவும் அமைந்திருந்தது இதை தொடர்ந்து இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டு இருந்தது என்பது குறிபிடதக்கது .
மேலும் மார்க் சோபர், இலங்கையுடன் இஸ்ரேல்  விவசாய துறையில் மிகவும் நெருக்கமாக இயங்கிவருகின்றது இஸ்ரேலின் விவசாய தொழிநுட்பத்தை இலங்கையில் பயன்படுத்தவுள்ளது அதற்கான இலங்கையில் இரண்டு இடங்கள் இனம் காணப்பட்டுள்ளது அதில் உருளைகிழங்கு மற்றும் மாங்காய் பயிரிடப்படும் என்றும் இருநாடுகளுக்கும் இடையிலான இந்த தொடர்பு பயனுள்ளதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் இலங்கையுடன்  பொருளாதார ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திடவுள்ளது  இரு நாடுகளுக்கு இடையில் வியாபார கவுன்சில் ஒன்று  ஏற்படுத்த பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், புதுடில்லி மற்றும் கொழும்புக்கான இஸ்ரேலியத் தூதுவர் மார்க் சோபர் க்கும் இடையில் கடந்த வருடம்  நடைபெற்ற சந்திப்பில் இதுகுறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டது .
கடந்த வருடம் ஜனாதிபதியுடனான சந்திப்பில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில்  இலங்கை வெற்றி பெற்றமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்ட Mark Sofer, தற்போது இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார். புதுடில்லி மற்றும் கொழும்புக்கான இஸ்ரேலியத் தூதுவர் மார்க் சோபர் -Mark Sofer- இஸ்ரேலியப் முன்னாள் பிரதமர் ஷிமோன்  பெரேஸ் -Shimon Peres- இன் முன்னாள் கொள்கை வகுப்பு ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது
இலங்கைக்கும் ஈரானுக்குமிடையில் 2004 ஆம் ஆண்டு முதல் நெருக்கமான உறவுகள் தொடர்ந்துவருகின்றன. ஈரான் இலங்கையின் பொருளாதாரத் துறையில் பல பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதது ஈரானுக்கும் இலங்கைக்குமிடையிலான இராணுவ ரீதியான உறவுகள் குறித்து அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகள் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி  செய்திகள்  வெளிவந்தன இந்த நிலையில் தற்போது இலங்கையின் நகர்வுகள் ஈரானினால் அவதானிக்கப்பட்டு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதேவேளை சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஸ்தி 1981 இல் எழுதி வெளியிட்ட நடுநிசி சிறுவர்கள்- Midnight’s Children- என்ற கதையை இலங்கையில் இரகசியமாக படமாக்கப்பட்டு விட்டது என்று செய்திகள் வெளியாகின.  கடந்த மார்ச் மாதம் இலங்கையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் தீடீர் என்று இடை நிறுத்தப்பட்டது இதற்கு ஈரானின் தலையீடு இருந்ததாக இயக்குனர் தீபா மேத்தா தெரிவித்திருந்தார் என்பதும் பின்னர் ஜனாதிபதியின் ஆதரவுடன் படமாக்கப்பட்டது என்று  தீபா மேத்தா தெரிவித்தமையும் சுட்டிகாட்ட தக்கது.

No comments:

Post a Comment

المشاركات الشائعة