இலங்கையின் பல பிரதேசங்களிலும் தங்கப் படுக்கைகள் காணப்படுவதாக கனிய வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கனிய வளங்கள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வின் போது பிரஸ்தாப விடயம் தெரிய வந்துள்ளதாகவும் அதன் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு பலாங்கொடை, கிரிஇப்பன் ஆர பிரதேசங்களிலும், வளவை கங்கையின் ஆற்றுப்படுக்கையை அண்டியும் தங்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் ஒருசில இடங்களில் தங்கம் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டாலும் அது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அதே நேரம் உலகின் பல நாடுகள் தங்கத்தைப் பிரித்தெடுப்பதற்கு பௌதீக மற்றும் இரசாயன வழிமுறைகளைக் கையாண்ட போதிலும், இலங்கையில் ஒருபோதும் இரசாயன முறையைக் கையாள அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் கனிய வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
-tamilwin-
No comments:
Post a Comment