M.ஷாமில் முஹம்மட்
துருக்கியில் நேற்று இடம்பெற்ற 17 வது பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் அர்பகான் தலைமையிலான நீதிக்கும்அபிவிருத்திக்குமான AKP கட்சி மூன்றாவது தடவையாகவும்வெற்றிபெற்றுள்ளது நேற்று துருக்கியில் இடம்பெற்ற தேர்தலில் அர்பகான் தலைமையிலான ஆளும் தரப்பு பாரிய வெற்றியை பெற்றுகொண்டுள்ளது.
துருக்கியின் முக்கிய எதிர்கட்சியான மதச்சார்பற்ற குடியரசுக் கட்சியான CHP 25.33% வாக்குகளை பெற்று 135 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது கடந்த முறையுடன் ஒப்பிடும்போது இந்த கட்சியின் வாக்கு வங்கியும் சற்று அதிகரித்துள்ளது கடந்த முறை 20.85 வீதமான வாக்குகளை பெற்றிருந்தது இந்த முறை 25.33% வாக்குகளை பெற்று தனது வாக்கு வங்கியை விரிவாக்கியுள்ளது.
துருக்கியில் நேற்று இடம்பெற்ற 17 வது பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் அர்பகான் தலைமையிலான நீதிக்கும்அபிவிருத்திக்குமான AKP கட்சி மூன்றாவது தடவையாகவும்வெற்றிபெற்றுள்ளது நேற்று துருக்கியில் இடம்பெற்ற தேர்தலில் அர்பகான் தலைமையிலான ஆளும் தரப்பு பாரிய வெற்றியை பெற்றுகொண்டுள்ளது.
துருக்கியில் நேற்று 52,758,907 ஐந்து கோடி இருபத்தி ஏழு லட்சத்தி 58,907 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தார்கள் இவர்களில் 43,912,170 வாக்காளர்கள் வாக்குகளை பயன்படுத்தியுள்ளனர். இவர்களில் 42,972,665 பேரின் வாக்குகள் செல்லுபடியானதாக ஏற்றுகொள்ளப்பட்டது. அதில் 93,9505 பேரின் வாக்குகள் செல்லுபடியற்றதாக நிராகரிக்கப்பட்டுள்ளது துருக்கியின் மக்கள் தொகை 78,785,548 என்பதும் நேற்று இடம்பெற்ற தேர்தல் மூலம் மொத்தம் 550 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிபிடத்தக்கது.
கடந்த 2002 ஆம் ஆண்டு தொடக்கம் இரண்டாவது தடவையாகவும் ஆட்சியில் இருக்கும் இஸ்லாமிய பின்னியை கொண்டுள்ள நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி கடந்த முறை 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் 46.66 வீதமான வாக்குகளை பெற்று 341 ஆசனங்களை கைப்பற்றியது இந்த முறை 49.95% வீதம் வரையான வாக்காளர்களின் ஆதரவை பெற்று தனது வாக்குவங்கியை விரிவுபடுத்தியுள்ளது எனினும் துருக்கியின் தேர்தல் முறை கட்சிக்கு 326 ஆசனங்களை மட்டும் பெற்றுகொடுதுள்ளது.
இந்த நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி – 50.% வாக்குகளை பெற்று, 21,465,541 கோடி வாக்காளர்கள் இந்த கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க 326 ஆசனங்களை பெற்றுள்ளது. கடந்த முறையுடன் ஒப்பிடும்போது இந்த முறை தேர்தலில் கட்சின் வாக்குவங்கி கணிசமான அதிகரிப்பை பெற்றுள்ளது. பல மில்லியன் புதிய ஆதரவாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது .
துருக்கியின் முக்கிய எதிர்கட்சியான மதச்சார்பற்ற குடியரசுக் கட்சியான CHP 25.33% வாக்குகளை பெற்று 135 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது கடந்த முறையுடன் ஒப்பிடும்போது இந்த கட்சியின் வாக்கு வங்கியும் சற்று அதிகரித்துள்ளது கடந்த முறை 20.85 வீதமான வாக்குகளை பெற்றிருந்தது இந்த முறை 25.33% வாக்குகளை பெற்று தனது வாக்கு வங்கியை விரிவாக்கியுள்ளது.
மற்றுமொரு எதிர்கட்சியான வலது சாரி தேசியவாத கட்சியான MHP 13.33% வாக்குகளை பெற்று 53 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது கடந்த முறையுடன் ஒப்பிடும்போது இந்த கட்சியின் வாக்கு வங்கி இழப்புகளை கண்டுள்ளது கடந்த முறை 14.29 வீதமான வாக்குகளை பெற்றிருந்தது இந்த முறை 13.33% வாக்குகளை பெற்று தனது வாக்காளர்களை இழந்துள்ளது.
அதேவேளை அறுவதற்கும் அதிகமான சுயேற்சை குழுக்கள் இணைத்து 6.05% வாக்குகளை பெற்று 36 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது இவை குறிப்பாக துருக்கியின் சர்ச்சைக்குரிய பகுதியை பிரதிநிதித்துவப் படுத்தும் குர்திஷ் சமாதானம் மற்றும் சமாதானத்துக்கான சுயேற்சை குழுக்களை கொண்டது என்பது குறிபிடத்தக்கது .
நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் ஆட்சிகாலத்தில் துருக்கி பெரிதும் வளர்ச்சி கண்டுள்ளது உலகில் சீனாவுக்கு அடுத்ததாக அல்லது அதற்கு நிகராக மிகவும் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதரத்தை கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது. துருக்கியின் ஆள்வீத வருமானம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது இவற்றுக்கு மேலாக இஸ்லாமிய கோட்பாடுகளை கொண்டு செயல்படுவது இந்த கட்சி மூன்றாவது தடவையாகவும் மக்களால் தெரிவு செய்யப்பட காரணமாக அமைந்துள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் தமக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தருமாறு மக்களிடம் கேட்டுகொண்டார் ஆனால் தனது வாக்கு வங்கியை பெரிதும் அதிகரித்துள்ள நீதிக்கும் அபிவிருத்திக்குமான AKP கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறவில்லை.
ஆனாலும் பிரதான மூன்று எதிர் கட்சிகளின் ஆதரவுடன் 30 ஆண்டு கால இராணுவ தலையீடுகளை கொண்ட துருக்கிய யாப்பை மாற்றமுடியும் துருக்கிய மக்களுக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்க முடியும் அது தவறும் பச்சத்தில் நேரடியாக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றின் ஊடாக அதனை செய்து விடமுடியும் அன்று கட்சி தெரிவித்துள்ளது இந்த கட்சியின் மூன்றாவது வெற்றி இஸ்லாமிய எழுச்சின் முக்கிய ஒரு அங்கமா பார்க்கப்படுகின்றது.
இஸ்லாமிய கிலாபத் இறுதியாக அழிக்கப்பட்ட தேசத்தில் இஸ்லாம் எழுச்சி பெறுவது முஸ்லிம் உம்மாஹ்வுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தியாகும். எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்துடன் மிகவும் நெருக்கமான உறவை நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி கொண்டுள்ளதாகவும் அதை புலனாய்வு செய்துகொண்டிருந்த இரண்டு புலானய்வு செய்தியாளர்களை அல்லது மேற்குலகின் உளவாளிகளை அர்பகான் அரசால் கைது செய்யப்பட்பட்டுள்ளார்கள் என்று அண்மையில் துருக்கி எதிர்கட்சி பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியமை குறிபிடத்தக்கது
Thanks:OurUmmah
No comments:
Post a Comment