Search This Blog

Jun 23, 2011

முஸ்லிம்கள் எதிர்கொள்ளப்போகும் பிரச்சினைகளை கையாள ஒரு பொறிமுறை வேண்டும்

M.ஷாமில் முஹம்மட்
கொழும்பு தெஹிவளை பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றுக்குள் பெளத்த மதகுருமார்கள் சிலர் நுழைந்து அதனை மூடிவிடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த அச்சுறுத்தல் பின்னர் அதை தொடர்ந்த அச்சுறுத்தல்கள் காரணமா குறித்த மஸ்ஜித் அதன் ஜமாஅத் தொழுகைகளை இடைநிறுத்தியுள்ளது என்ற செய்தி நம் அனைவருக்கும் தெரியும்.
ஒரு நாட்டில் ஒரு இனத்தின் உரிமைகளுக்காக அந்த இனத்தின் நிறுவங்கள் குரல் எழுப்புவது அதன் உரிமை ஆனால் அந்த உரிமை குரல்கள் மற்ற இனத்தின்  அல்லது மதத்தின் உரிமைகளை முடக்குவதாகவே அதன் குரல் வலையை நசுக்குவதாகவே இருக்குமாக இருந்தால் அது தெளிவான இனவாதமாக மாறிவிடுகின்றது .இலங்கை சுதந்திரம் அடைந்த 1949 ஆம் ஆண்டில் இருந்து இலங்கையை எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு இலங்கை பெளத்த நாடு என்ற வாதம் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது பின்னர் 1972 ஆம் ஆண்டில் இலங்கையின் முதல் குடியரசு யாப்பின் 2 ஆம் பகுதி 6ஆம் உறுப்புரை இலங்கை ஒரு பெளத்த நாடு என்றும்  பௌத்தத்தை பாதுகாப்பதும் அதை போசிப்பதும் அரசின் கடமை என்றும் தெரிவிக்கின்றது அதேவேளை அந்த யாப்பு இலங்கையில் உள்ள அனைத்து மதங்களுக்குமான உரிமைகளின் பாதுகாப்பையும் உறுதிப் படுத்துகின்றது.
25 வருட கால யுத்தத்தை அனுபவித்த இலங்கை போன்ற பல்லின சமூகம் வாழும் நாட்டில் யுத்தத்துக்கு பின்னரான இலங்கயில் சிறுபான்மையினரின் அனைத்து உரிமைகளையும் யாப்பு ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் அரசு உத்தரவாதப்படுத்துவது அரசின் முன்னால் இருக்கும் பாரிய பொறுப்பாக இன்று உள்ளது.
இனவாத கருத்துகளும் செயல்பாடுகளும் இலங்கையின் சிறுபான்மை சமூகங்களை இந்த நாட்டில் அன்னியத்தை உணரவும் அதை அவர்களின் ஆழ்மனதில் ஆழமாக பதிந்து கொள்ளவும் தொடர்ந்து காரணாமாக இருக்காதவாறு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஒரு இனம் , சமூகம் தனது உரிமைகளுக்காக குரல்கொடுப்பது அதற்காக செயல்படுவது என்பது பெரும்பான்மை சிறுபான்மை என்ற வித்தியாசம் இன்றி அது அவர்களின் உரிமை ஆனால் அது எப்போது மாற்று சமூகங்களின் உரிமைகளை முடக்கவும் கட்டுப்படுத்தவும் முற்படுவதை அனுமதிக்க கூடாது.
இலங்கையில் சிறுபான்மை சமூகத்தின் ஒன்றான தமிழர்கள் அவர்களின் உரிமை போராட்டம் என்று அறிவித்து மேற்கொண்ட போராட்டத்தினால் முஸ்லிம்களுக்கு பாரிய இன ஒடுக்கு முறையை பரிசாக வழங்கியுள்ளார்கள் தமது உரிமைகளுக்காக போராடியதாக கூறியவர்கள் முஸ்லிம்களை ஒடுக்கினார்கள் யுத்தம் முடிந்த பிறகும் முஸ்லிம்களுக்கு தமிழர்களின் ஆயுத போராட்டம் ஏற்படுத்திய காயங்கள் ஆறாத புண்ணாகி விட்டுள்ளது.
இந்த தொடரில் சிங்கள பெளத்த மக்களின் உரிமைகளை பாதுகாப்பதாக அதற்காக போராடுவதாக கூறும் ‘சிங்கள் சிறுபான்மை அரசியல் கட்சிகள்’ முஸ்லிம்களின் உரிமைகளை முடக்குவதாகவே அதன் குரல் வலையை நசுக்குவதாகவே இருக்க  அரசு அனுமதிக்க முடியாது.
யுத்தம் முடிந்துள்ள நிலையில் பல அரசியல் கட்சிகள் புலிகளை காட்டி அரசியல் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் இனவாத அரசியல் சக்திகள் தமது கொள்கை உயிர் வாழத் தேவையான புதிய களங்களை திறக்க தயங்காது அதுதான் உலக இனவாத அரசியல் வரலாறு விபரீதங்கள் நடக்க முன்னர் முஸ்லிம் அரசியல் மற்றும் அரசியல் சார்பற்ற நிறுவங்கள் கூட்டாக  புதிய பொறிமுறை ஒன்றை உருவாக்க முன்வரவேண்டும் உருவாக்கப்பட்டும் பொறிமுறையின் ஊடாக முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் எதிர்கொள்ளப்போகும்  பிரச்சினைகளை கையாளவேண்டும். இந்த பொறிமுறை பற்றி ஆராயவும் செயல்படவும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபைதான் மற்ற அரசியல் மற்றும் அரசியல் சாரா நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவேண்டும்.
புலிகளின் பின்னரான வடக்கு கிழக்கில் இவ்வாரான பிரச்சினைகள் தற்போது பலமும் பலவீனமும் என்ற சமன் பாட்டை தொட்டுள்ளது ஆனால் வடக்கு கிழக்கிற்கு வெளியில் இனவாத சிந்தனை பலம் பெற்றுள்ளதாக உணரமுடிகின்றது தென்பகுதி முஸ்லிம்கள் மஸ்ஜிதுகளை நிர்மானிப்பதிலும் நிர்வாகம் செய்வதிலும் புதிதாக பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றார்கள் என்பதை நடைபெறும் சம்பவங்கள் காட்டுகின்றது கொழும்பு தெஹிவளை கல்போவில பாத்தியா மாவத்தை மஸ்ஜித் சம்பவத்தை போன்ற பல சம்பவங்கள் இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளன இடம்பெற்றும் வெளிவராமலும் இருக்கலாம்
கடந்த 2010ஆண்டு மே மாதம் குருநாகல் மாவட்டத்தில் இப்பாகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மெல்சிறிபுர பிரதேச கிராமத்தில் அமைத்துள்ள நூர் ஜும்மாஹ் மஸ்ஜிதின் உள்பகுதியினுள் நுழைந்த பெரும்பான்மை இன குழுவொன்று அங்கிருந்த மஸ்ஜிதின் உபகரணங்களை அடித்து உடைதுள்ளதுடன் மஸ்ஜிதின் கட்டிட தொகுதிக்கும் சேதம் ஏற்படுத்தியது பின்னர் உரிய அனுமதியுடன் சிறிய அளவில் மஸ்ஜித் கட்டிடம் கட்டப்பட்டது தற்போது அங்கு வெளிப் பிரதேச முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடகக் கூடாது என்று அச்சுறுத்தப் படுவதாக தெரியவருகின்றது
அதேபோன்று கடந்த 2010ஆண்டு கண்டி வட்டாரத்தென்னை என்ற பிரதேசத்தில் நீண்டகாலமாக இயங்கிவந்த தக்கியாவும் அல் குர்ஆன் மாலை நேரப்படசாலையும் காடையர் குழுவினால் தாக்குதளுக்கு உள்ளானது பின்னர் மூடி திறக்கும் நிலை ஏற்பட்டது அதேபோன்று கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கண்டி அம்பிட்டிய என்ற பிரதேசத்தில் இயங்கிவந்த அல் குர்ஆன் மாலை நேரப்படசாலையையும் , மஸ்ஜிதையும் உடன் மூடிவிட வேண்டும் அல்லது உடைத்து தகர்க்க படும் என்று கூறிக்கொண்டு குறித்த மஸ்ஜிதினுள் நுழைந்த பௌத்த தேரர்கள் உட்பட பலர் மஸ்ஜிதின் இமாமை மிக கடுமையாக விரட்டிவிட்டு சென்றனர் இதை தொடர்ந்து போலீஸ் வழக்கு நீதிமன்றம் செலும்வரை அல் குர்ஆன் மாலை நேரபடசாலையை தடை செய்தது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டி தெய்யன்வய என்ற கிராமத்தில் மஸ்ஜித் ஒன்று தொடர்பாக பலத்த எதிர்ப்பு நிலவியுள்ளது குறித்த மஸ்ஜிதை மூடும்படி சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளது ஆனால் தெய்யன்வய முஸ்லிம்கள் இந்த பயமுறுத்தல்களை வெற்றிகரமாக முறியடித்து மஸ்ஜிதின் செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
அதேபோன்று கடந்த 2010ஆண்டு ஜனவரி மாதம் கண்டி அரும்பொலை என்ற பிரதேசத்தில் முஸ்லிம்களால் நடாத்தப்படும் இஸ்லாமிய முறையிலான சர்வதேச பாடசாலை ஒன்றுக்கு அந்த பாடசாலையை உடனடியாக மூடிவிட்டு அங்கிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தும் சுவரொட்டிகள் அந்த பிரதேசத்தில் ஒட்டப்பட்டது. இவ்வாறான பல பிரச்சினைகளை முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளனர் .
மறுபுறத்தில் முஸ்லிம்கள் எதிர்கொள்வதை விடவும் பாரிய நெருக்கடிகளை சிங்கள கிறிஸ்தவர்கள் எதிர் கொள்கின்றனர் கடந்த ஆண்டுகளில் நூற்றுக் கணக்கான தாக்குதல்கள் கிறிஸ்தவ மையங்கள் மீது நடத்தப்பட்டுள்ளது இவற்றில் கிறிஸ்தவ தேவாலையங்கள் மீதும் பாதிரியார்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஆர்பாட்ட பேரணிகள் என்பனவும் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராஜகிரியவில் சட்டவிரோத கட்டிடம் என்று அடையாளம் காணப்பட்ட தமிழ் கிறிஸ்த தேவாலையம் ஒன்று நகர அபிவிருத்தி அதிகாரசபையால் முற்றாக இடித்து தகர்க்கப்பட்டது இதேபோன்று சிங்கள கிறிஸ்தவ தேவாலையங்கள பல அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு உள்ளதாக கிறிஸ்தவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு மாலபே , ஜாயல போன்ற பகுதிகளிலும் இதேபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன கொழும்புக்கு வெளியிலும் பல மாவட்டங்களில் அவர்கள் பிரச்சினையை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர் குறிப்பாக கம்பஹா ,அனுராதபுரம் , ஹோமாகம, வாட்டுவா, அம்பன்போல, எம்பிலிபிட்டிய, ரட்னபுர, கண்டி சிலாபம் ஆகிய பிரதேசங்களில் அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் என்றாலும் அவர்கள் தற்போது கையாளும் பொறிமுறை ஒன்றின் ஊடாக பல சம்பவங்கள் குறைவடைந்துள்ளது என்று தெரிகின்றது .
முஸ்லிம் சமூகத்தை நோக்கி வரும் இவ்வாறான பிரச்சினைகளை சரியாக எதிர்கொள்ள மிகவும் பொருத்தமான பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவேண்டும் அதை உருவாக்குவதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் , இஸ்லாமிய நிறுவங்கள் , மனித உரிமை அமைப்புகள் , முஸ்லிம் அல்லாத அரசியல்வாதிகள் என்று பலரையும் உள்ளடக்கி ஒரு பொறிமுறை உருவாக்குவது பல பாரிய பிரச்சினைகளைக் கூட மிகவும் இலகுவாக தீர்த்துக்கொள்ள வழிகாட்டலாம் இதை  அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தொடங்கி வைப்பதுதான் பொருத்தமாக அமையும் .

-Lankamuslim-

No comments:

Post a Comment

المشاركات الشائعة