Search This Blog

Jun 6, 2011

முஸ்லிம்களை மீள் குடியேற்ற அரசிடம் கொள்கை ஒன்று இல்லை: யாழ் அரச அதிபர்



யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் இமேல்டா சுகுமார் மீள் குடியேற்றம் Relocation என்பது வேறு மீள் குடியமர்வு Resettlment  என்பது வேறு அரசாங்கதுடன் மீள் குடியேற்றம் Relocation தொடர்பான கொள்கை ஒன்று இல்லை என்றும் யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் 15 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து சென்றார்கள் (20 வருடங்களுக்கு முன்னர் விடுதலை புலிகனால் பலவந்தமாக வெளியேற்றபட்டார்கள்) என்றும் ஐந்து குடும்பமாக சென்றவர்கள் இன்று பதினைந்து இருபது குடும்பங்களாக திரும்பி வருவார்கள் ஆனால் அப்படிவரும்போது அது மீள் குடியமர்வுவாக Resettlment பார்க்கமுடியாது அது மீள் குடியேற்றம் Relocation என்று தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களின் வீடுகள் ஐந்து ஆறு பேர்ச் காணிகளில்தான் அமைத்துள்ன  அதை இன்று பல குடும்பங்கள் பங்கு போடமுடியாது இதனால் அவர்களுக்கு புதிய காணிகளை வழங்கவேண்டும் யாழ் நகர் பகுதியில் பெரிதாக காணிகள் இல்லை  அவர்கள் தாம் நகர் பகுதில்தான் வாழ்ந்தோம் அதனால்  விரிவாக  எமக்கு நகர பகுதியில் காணிகள் தரப்படவேண்டும் என்று தெரிவிக்கின்றனர் அனால் காணிகள் நகர பகுதியில் இல்லை அரசாங்கத்திடம் மீள் குடியேற்ற கொள்கை ஒன்று இல்லை அதனால் எமக்கு அரசாங்க அறிவுறுத்தல் வழங்கபடாமல் எம்மால் மீள் குடியேற்ற முடியாது என்று அததரண செய்திக்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களுக்கென்று சொந்த காணியில்லை என்பதை அவர்களே தெரிவிகின்றனர் அரசாங்கத்தின் மீள்குடியேற்றம் தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் வகுப்படவில்லை எனவும் தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவது மீள்குடியேற்றம் அல்ல எனவும் மீள்குடியமர்வே தற்போது இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாவகுழியில் சிங்களவர்கள் வந்து அமர்ந்திருப்பது காணி அத்துமீறல் Encroachment என்றும் தெரிவித்துள்ளார்.
அரசிடம் முஸ்லிம் மீள் குடியேற்றம்  தொடர்பாக கொள்கை ஒன்று இல்லை என்பதி கடந்த இரண்டு வருடங்களாக தெரிவித்து வருகின்றது என்பது குறிபிடத்தக்கது
அரசிடம் முஸ்லிம் மீள் குடியேற்றம்  தொடர்பாக கொள்கை ஒன்று இல்லை எமது  முந்திய கட்டுரைகள் :

1.Non-existence of operational standard for Muslim IDPs who had to undergo living in camps for 20 years


2.வட மாகான முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தனியான சட்ட கொள்கை ஒன்றின் ஊடாக அணுகப் படவேண்டும்


3.Northern Muslim IDps’ Situation and Case completely different


யாழ் மாவட்ட அரச அதிபர் இமேல்டா சுகுமார் செவ்வி:

No comments:

Post a Comment

المشاركات الشائعة