Search This Blog

Jun 22, 2011

நேட்டோ படைகளால் கொல்லப்படும் லிபிய பொது மக்கள்


 லிபியாவின் சர்வாதிகார ஜனாதிபதி கடாபியின் 41 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன இதை கடாபி மிகவும் கொடூரமாக ஒடுக்க செயல்பட்டார் பலர் பலியாகினர் இதை தொடர்ந்து லிபியாவின் பொது மக்களை பாதுகாக்கபோகின்றோம் என்று கூறி நடவடிக்கையில் இறங்கி உள்ள மேற்கு கூட்டு படைகளும் நோட்டோ படையும் லிபிய மீது தாக்குதல்களை நடாத்தி வருகின்றது.
தற்போது லிபியா ஒரு முழுமையான ஆப்கானாகவே மாறியுள்ளது லிபியாவின் பிரதான எண்ணெய் வயல்கள் கடாபிக்கு எதிரான போராளிகளிடம் கட்டுமாட்டில் உள்ளது அவர்களுடன் சேர்ந்த மேற்கு கூட்டு படைகளும் நோட்டோ படையும் இயங்கிவருவதாக மேற்கு தெரிவிக்கின்றது இந்த நிலையில் தலைநகர் திரிபோலியில் புதிய வான் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 15 வரையான பொது மக்கள் டுள்ளனர்.
நகரின் சூக் அல் ஜீமா பிரதேச குடியிருப்பு பகுதி மூன்று அடுக்கு தொடர் மாடி குடியிருப்பு தகர்க்கப்பட்டுள்ளது இதன் போதே அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் லிபியா மீதான நேட்டோ படைகளின் தாக்குதல் ஆரம்பமானது இதுவரை 10 ஆயிரம் தாக்குதல்களை நேட்டோ படைகள் மேற்கொண்டுள்ளன. இதில் 4 ஆயிரம் தாக்குதல்கள் லிபிய அரசாங்க இலக்குகளை குறிவைத்த நடாத்தப்பட்டுள்ளது.
தாக்குதல்களில் லிபிய இராணுவத்தை விட  பல பொதுமக்களும்  போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர் அங்கு மேற்கு தனது தேவையை நிறைவேற்ற    அங்கும் முஸ்லிம்களைத்தான் கொன்று வருகின்றது.


விரிவாக Video

No comments:

Post a Comment

المشاركات الشائعة