Search This Blog

Mar 31, 2011

செச்னியா போராளிகளின் தளபதி டோகோ உமரோ பற்றிய செய்தி உறுதிப்படுத்தப் படவில்லை



 ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டுள்ள செச்னியாவின் விடுதலை போராளிகள் அமைப்பின் தலைவரான டோகா உமரோ கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்யா-ரஷ்யா டுடே- தெரிவித்துள்ளது ரஷ்யாவின் உளவு மற்றும் யுத்த விமானங்கள் இன்று செச்னியா காட்டு பகுதி ஒன்றில் நடாத்திய தாக்குதலில் 17 போராளிகள் கொல்லபட்டுள்ளனர் அவர்களில் தலைவரான  டோகா உமரோ -அபூ  உஸ்மான்- உட்பட முக்கிய தலைவர்களான சுபியான், ஹம்சத் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த தகவல் தொடர்பாக செச்னியா போராளிகள் அமைப்பு எந்த செய்திகளையும் வெளியிடவில்லை  ரஷ்யாவின் வேறு செய்திகள் கொல்லப்பட்ட 15 போராகளில்  டோகா உமரோ இல்லை என்றும் சுபியான், ஹம்சத் ஆகிய தளபதிகள் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது விரிவாக
பல நூற்றாண்டுகளாக செச்னியா முஸ்லிம்கள் கம்யூனிஸத்துகு முன்பும் பின்பும் ரஷ்யாவுக்கு எதிரானபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பல நூற்றாண்டுகளாக அடகு முறைகளை சந்தித்த இந்த செச்னியா மக்கள் 1991 ம் ஆண்டில் கம்யூனிஸ சோவியத் யூனியன் சிதறிய பிறகு சோவியத் ஒன்றியத்தின் அழிவுடன் சுதந்திர செச்னியா என்ற தமது இஸ்லாமிய சுதந்திர தாகத்தை நிறைவேறுவதற்கான வாய்ப்பாக செச்னியா முஸ்லிம்கள் கருதினர்.
ஆனால்  போரிஸின் மற்றும் விளாடிமிர் பூட்டின், டிமிட்ரி மெட்வடே ஆகியோரின் ஆக்கிரமிப்புக் கொள்கை அதற்குத் அனுமதிக்கவில்லை மேற்கு நாடுகளுக்கு ஈராக்கை போன்று ரஷ்சியாவுக்கு மிக அதிகமான எண்ணை வளமிக்க நாடான செச்னியா கிடைத்துள்ளது செச்னியாவை தனது ஆக்கிரமிப்பில் வைத்திருக்க செச்னியாவின் சுதந்திரப் பிரகடனத்தை அதன் முனைப்புகளை ரஷ்யா கொடூரமாக ஒடுக்கிவந்துள்ளது  .
ரஷ்யா 1994-தொடக்கம் 1996 வரை . ரஷ்யா மிக கொடூரமாக யுத்தம் ஒன்றை நடத்தியது ஷாமில், அஸ்லான் மாஸ்ஹடோவ் போன்ற போராளிகளால் வழி நடத்தபட்ட இந்த முதல் கட்ட இரண்டு வருட எதிர் சமரில் 75,000 ரஷிய இராணுவ ஆக்கிரமிப்ளர்கள் கொல்லப்பட்டும் , 15,000 வரை போராளிகள் சஹீதாகியும் பொதுமக்கள் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுமுள்ளனர்.
போராளிகளில் ஒரு பகுதியினர் தற்போது ரஷ்யாவின்  ஆக்கிரமிப்பில் இருக்கும் செச்னியா   ரஷ்யாவுடனான உடன்படிக்கையின் கீழ் நிர்வாகம் செய்து வருகின்றனர் ஆனால் டோகோ உமரோ தலைமையினான போராளிகள் விடுதலை என்ற இலக்குடன் தொடராக போராடிவருகின்றனர் கடந்த ஜனவரி மாதம் மொஸ்கோவில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு இந்த அமைப்பு உரிமை கோரியிருந்தது என்பது குறிபிடத்தக்கது இவர்கள் போராட்டத்துக்கு கையாளும் சில வழிமுறைகள் கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இன்று வரை தொடராக போராடிவரும் செச்னிய போராளிகள் பல தலைவர்களை ஒன்றன்பின் ஒன்றாக இழந்துள்ளனர் தற்போது மிகவும் கூடிய நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றனர் தற்போது இந்த போராட்டம் டோகா உமரோ என்பவரினால் வழிநடாத்தப்பட்டு வருகின்றது என்பது குறிபிடத்தக்கது.

இது தொடர்பாக இன்று ரஷ்யாவின் ஊது குழலான    ‘ரஷ்யா டுடே’  ஒளிபரப்பிய செய்தி


 Thanks : OurUmmah

பிரிட்டனில் இஸ்லாத்தை ஏற்று கொள்பவர்களின் எண்ணிக்கை 100,000 த்தை எட்டுகின்றது


பிரிட்டனில் இஸ்லாத்தை ஏற்றுகொண்டு வாழ்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சியத்தை-100,000- எட்டுகின்றது இவர்களில் பிரிட்டிஷ் பெண்கள் இஸ்லாத்தை ஏற்று கொள்பவர்களில் முன்னிலையில் உள்ளனர் என்று நேற்று-3.01.2011- லண்டனில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை தெரிவித்துள்ளதாக வோல்ஸ் ஒன் லைன்-walesonline- தெரிவித்துள்ளது-ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையை ourummah.org உங்களுக்கு தமிழில் தருகின்றது.
அந்த ஆய்வறிக்கை நம்பிக்கை விவகாரங்கள் -Faith Matters- என்ற அமைப்பு சார்பில் கெவின் பிரிஸ்-Kevin Brice- என்ற ஸ்வன்சியா பல்கலை கழக -Swansea University-ஆய்வாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது விரிவாக பார்க்க  அதன் கணக்கெடுப்பில் பிரிட்டனில் இஸ்லாத்தை ஏற்றுகொண்டு வாழ்பவர்களின் எண்ணிக்கை 2001 ஆம் ஆண்டில் 600,00 ஆயிரம் வரை இருந்து தற்போது 900,00 ஆயிரம் தொடக்கம் 1 லட்சம் -100,000 – வரையில் அதிகரித்திருக்கும் என்று தெரிவித்துள்ளது , கடந்த ஆண்டில் மட்டும் 2010- பிரிட்டனில் 5200 பேர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கின்றது
கடந்த வருடம் இஸ்லாத்தை ஏற்றுகொண்டுள்ள 122 நபர்களில் செய்யப்பட்ட ஆய்வில் 56 வீதமானவர்கள் வெள்ளை இன பிரிட்டிஷ் பெண்கள் என்றும் 62 வீதமானவர்கள் பெண்கள் என்றும் சராசரியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்பவர்களின் வயது சற்று 27 க்கு மேல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அவர்களில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னர் பெரும்பான்மையானவர்கள் அவர்களில் குடும்பத்தின் எதிர்மறையான மனோபாவம் காரணமாக கஷ்டங்களை எதிர்கொண்டதாகவும் சில காலம் கழிந்ததும் எதிர்மறையான மனோபாவம் பெரிதும் சாதகமான மனோபாமாக மாறுவதாக அவர்கள் தெரிவித்ததாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
பிரிட்டனில் இஸ்லாத்தை ஏற்றுகொண்டு வாழ்பவர்களின் பெரும்பான்மையனவர்கள் தாம் முஸ்லிம் மற்றும் பிரிட்டிஷ் என்று காட்டுவதாகவும், முஸ்லிம்- கள் பிரிட்டிஷ் சமூக மற்றும் கலாச்சாரத்தில் நம்பிகையின்மையை உணரவில்லை என்றும் தெரிவிக்கின்றது.
ஆனால் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுகொள்வதற்கு முன்னர் தமது சொந்த வாழ்க்கையை தொலைந்திருந்ததாகவும் வாழ்வின் அர்த்தம் இன்றி இருந்ததை உணர்ததாக தெரிவித்துள்ளதுடன் மத நம்பிக்கை குறைந்த பிரிட்டிஷ் மக்களிடம் ஒழுக்கமற்ற பண்புகள் சாதாரண விடையமாக மாறிருப்பதாகவும் அவை அச்சத்தை ஏற்படுத்துவதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது
அவர்களின் மிக சிறு தொகையினர் பிறந்த தினம் கொண்டாடுவதையும், இசை கேட்பதையும், கற்பனை கதைகளை வாசிப்பதையும் இஸ்லாம் தடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர், 10 வீதத்துக்கும் குறைவானவர்கள் குடும்ப கிறிஸ்மஸ் விருந்தில் பங்குகொள்வது தடைசெய்யப்பட்டதாக பார்கின்றனர் என்றும் அந்த அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
இஸ்லாத்தை ஏற்றுகொண்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமது அணைத்து நெருங்கிய நண்பர்களும் முஸ்லிம்கள் என்று தெரிவித்துள்ளனர் ஆனால் அவர்களின் அனைவரும் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து தம்மை ஒதுக்கி கொள்ளக் கூடாது என்று உணர்வதாக தெரிவித்துள்ளது.
இஸ்லாத்தை ஏற்றுகொண்டவர்களில் மிக பெரும்பான்மையானவர்கள் தமது தோற்றத்தை மாற்றிகொண்டனர் , அவர்களில் குறிபிடத்தக்க பெரும்பான்மையினர் ஹிஜாப்,போன்ற உடைகளை ஏற்றுகொண்டுள்ளனர் ஆனால் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் முகத்தை மூடி அணியும் உடையான நிகாப் என்பதுடன் உடன்படவில்லை ஆனால் அதை அணிவது பெண்களின் உரிமை என்பதற்கு ஆதரவாகவுள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிப்பதாக வோல்ஸ் ஒன் லைன் மேலும் தெரிவித்துள்ளது
பொதுவாகஇஸ்லாத்தை ஏற்றுகொண்ட பிரிட்டிஷ் மக்கள் பொதுவான வாழ்க்கையை நடத்துவதாகவும் அவர்கள் ஏனைய பிட்டிஷ் மக்களை அடிப்படையில் இஸ்லாத்துக்கு எதிரானவர்களா பார்கவில்லை என்றும் அந்த அறிக்கை தெரிவிப்பதாக வோல்ஸ் ஒன் லைன் மேலும் தெரிவித்துள்ளது.

Mar 30, 2011

இஸ்லாத்தின் பார்வையில் மூடர் தினம்!


இறைவனின் நேரிய வழிகாட்டுதல்களோ அறிவுப்பூர்வமான எந்தவிதக் கொள்கையோ இல்லாமல் தங்களின் மனோ இச்சைகளையே கொள்கைகளாகவும் வாழ்க்கை நெறியாகவும் கடவுளாகவும் பின்பற்றி வாழக்கூடியவர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் குறிப்பிட்ட தினங்களை முக்கியப்படுத்தி, அவற்றுக்கு முக்கியத்துவம் தந்து, அந்த நாட்களைக் கொண்டாடுவது ஆகும்.

இவ்வகையான கொண்டாட்டங்களில் காதலர் தினம், மனைவியர் தினம், அன்னையர் தினம், மூடர் தினம் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வகையான தினங்களைக் கொண்டாடுவோர் எந்த விதமான காரணங்களைச் சொன்னாலும் முஸ்லிம்களாகிய நாம் நமக்கு வழிகாட்டியாக வந்தக் குர்ஆனையும் ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு, “தின”ங்களில் வெளிப்படும் தீமைகளைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும் நேர்வழி பெறவும் முயல வேண்டும்.
பொய்யை, பரிகாசத்தை, ஏமாற்றுவதை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த “மூடர் தினம்”. மக்களில் பலர் மற்றவர்களை ஏப்ரல் ஃபூல்(முட்டாள்) ஆக்குவதற்காகப் பொய் பேசுகின்றார்கள். பிறரைப் பரிகாசப்படுத்திப் பார்க்கும் இவ்விஷயம், மக்களுக்கு மத்தியில் சாதாரணமாகத் தெரிந்தாலும் இஸ்லாமியப் பார்வையில் பெருங்குற்றம் ஆகும்.
பொய் கூறுதலையும் பரிகாசத்தையும் பற்றி இஸ்லாம்
பொய்யுரைப்பவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள்:
அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக, பொய்யை இட்டுக் கட்டுபவர்களெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள்தாம். இன்னும் அவர்கள்தாம் பொய்யர்கள் அல் குர்ஆன் 16:105.
முனாஃபிக்கின் (நயவஞ்சகனின்) அடையாளங்களில் ஒன்று பொய்யுரைப்பது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும்: அவன் பேசினால் பொய்யுரைப்பான்;  அவனிடம் எதையாவது நம்பி ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான் -  அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரீ.
எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும் அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான் – அல் குர்ஆன் 9:77.
பொய் பேசுவது நரகத்திற்கு வழிவகுக்கும்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்மை (பேசுவது), நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும்; நன்மையானது நிச்சயமாக சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒருவர் உண்மை பேசிக் கொண்டே  இருப்பார். இறுதியில் அவர் வாய்மையாளர் (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகி விடுவார். பொய் (கூறல்) நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழி வகுக்கும். ஒருவர் பொய் பேசிக்கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் “பெரும் பொய்யர்” எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார் - அறிவிப்பவர் :  அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), ஆதாரம்: புகாரீ.
பரிகசிப்பது, கேலி செய்வது அறிவீனர்களின் செயல்:
இன்னும் (இதையும் நினைவு கூருங்கள்:) மூஸா தம் சமூகத்தாரிடம், “நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்” என்று சொன்னபோது, அவர்கள்; “(மூஸாவே!) எங்களைப் பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?” என்று கேட்டனர். (அப்பொழுது) அவர், “(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறினார் – அல் குர்ஆன் 2:67.
பொய் பேசுபவனுக்கான தண்டனைகள்:
ஸமுரா இப்னு ஜுன்தப் (ரலி) அறிவித்தார்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம், “உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?” என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் நாடியவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள்.) ஒரு(நாள்) அதிகாலை நேர (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:
இன்றிரவு (கனவில்) இரு(வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, “நடங்கள்” என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் நாங்கள் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய)முகத்தின் ஒரு பக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரிவரை கிழித்தார். அதேபோல், அவரது மூக்கின் ஒரு துவாரத்தையும் ஒரு கண்ணையும் பிடரிவரை பிளந்தார். பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிக்கும்போது அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காகி விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், “அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யாவர்?” என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், “செல்லுங்கள், சென்றுவிடுங்கள்” என்றனர்.
நான் அவ்விருவரிடமும் “நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட அவைதாம் என்ன?” என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், “(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை உங்களுக்கு) நாங்கள் தெரிவிக்கிறோம்:
தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவை பிடரிவரை கிழிக்கப்பட்டுக் கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அவன் அதிகாலையில் தன் வீட்டிலிருந்து புறப்பட்டுப் போய் ஒருவரிடம் ஒரு பொய்யைச் சொல்ல, அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேருமே, அவன்தான் -  ஆதாரம்: புகாரீ ( நீண்ட ஹதீஸின் சுருக்கம்).
விளையாட்டுக்காகக்கூடப் பொய்ப் பேசக் கூடாது:
முஆவியா இப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மக்களைச் சிரிக்க வைப்பதற்காக பேசுபவனுக்கும் பொய் சொல்பவனுக்கும் கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் -  ஆதாரம்: திர்மிதீ.
இஸ்லாத்தில் விளையாட்டாகப் பொய்ப் பேசுவதுகூடத் தடுக்கப்பட்டுள்ளது. அதுபோலப் பிறரை மகிழ்விப்பதற்காகவும் பொய்ப் பேசக் கூடாது.
பொய் சாட்சி கூறல்:
ஏப்ரல் மாதத்தில் பிற மக்களை முட்டாளாக்க ஒருவன் முயற்சியில் இருக்கும்போது அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் சிலர் அந்தப் பொய்யனுக்கு ஆதரவு அளித்து, உதவி செய்யும் முகமாகப் பொய் சாட்சி பகர்கின்றனர். இதுவும் பெரும்பாவமான காரியமாகும்.
அபூபக்ரா(ரலி) கூறியதாவது: “பெரும்பாவங்களிலேயே மிகப்பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். “அறிவியுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று நபித் தோழர்கள் வேண்டினர். “அல்லாஹ்விற்கு இணை வைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும்தான்” என்று நபி(ஸல்) கூறினார்கள். சாய்ந்து கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் பிறகு எழுந்து அமர்ந்து, “அறிந்து கொள்ளுங்கள்! பொய்ப் பேசுவதும், பொய்ச் சாட்சியமும் (பெரும் பாவம்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (பெரும் பாவம்)என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தார்கள் -  நூல்: புகாரீ, முஸ்லிம்.
ஹோலி கலாச்சாரம்:
பொதுவாக மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் பிறருடைய மேலாடைகள் மீது மையைத் தெளித்து அசிங்கப்படுத்துகின்றார்கள். இதை ஏப்ரல் ஃபூலின் ஓர் அடையாளமாக நினைத்துச் செய்கின்றனர். மையைத் தெளிக்கும் இந்த நடைமுறையானது ஹோலிப் பண்டிகையின்போது நிறங்களை பரஸ்பரம் வீசிக் கொள்ளும் இந்துக்களின் ஒரு பிரிவினருடைய கலாச்சாரத்துடன் ஒத்துப் போகின்றது. எனவே, மாற்று மதக் கலாச்சாரம் என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் இதைக் கைவிட வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகின்றானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே! – நூல்: அபூதாவூத்.
இழிவாகக் கருதுவது:
பிறரை ஏப்ரல் ஃபூல்(முட்டாள்) ஆக்கியவர்கள் ஏன் அவர்களைப் பார்த்து, கைகொட்டி ஏளனமாக சிரிக்கின்றார்கள்? ஏன் கேலி, கிண்டல் செய்து அற்ப சந்தோஷம் அடைகின்றார்கள் என்று சிந்தித்தால் ஓர் உண்மை விளங்கும். அதாவது அவர்கள் தம்மைப் புத்திசாலியாகவும் உயர்ந்தவர்களாகவும் கற்பனை செய்து கொள்கின்றார்கள். எனவே ஆணவம் தலைக்கேறிய பிறகு மற்றவர்களைத் தம்மை விட அறிவில் குறைந்தவர்கள், இழிவானவர்கள் என்று முடிவு செய்வதன் காரணத்தால்தான் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தாமல், அலட்சியமாகக் கருதி, கேவலமாக நடத்தி, இழிவுபடுத்துகின்றனர்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முழுமையான முஸ்லிம் யாரென்றால், எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்று இருக்கின்றார்களோ அவர்தான் -  நூல்: புகாரீ.
எனவே, சகோதர-சகோதரிகளே!
இஸ்லாம் கடுமையாக எச்சரித்திருக்கும் இத்தகைய தீய செயல்களான பொய் பேசுதல், பிறரைத் துன்புறுத்திப் பார்த்து மகிழ்தல், ஏமாற்றுதல் ஆகியவற்றை முழுமூச்சாக செயல்படுத்தும் மிக மோசமான மூடர்களின் மூடர் தினத்தை விட்டும் முஸ்லிம்களாகிய நாம் தவிர்ந்திருப்பதோடு அல்லாமல் பிறருக்கும் இதனுடைய தீமைகளை எடுத்துக்கூறி இதனை நமது தமிழ்ச்சமூக மக்களிடமிருந்து களைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அல்லாஹ் அதற்குரிய ஆற்றலையும் மனவலிமையையும் தந்தருள்வானாக!
Courtesy: சத்திய மார்க்கம்

Mar 27, 2011

ஜாமிஆ நளீமிய்யா புதிய மாணவர்களை உள்வாங்குகின்றது


ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் – பேருவளை இஸ்லாமிய கற்கை பட்டபடிப்புக்கான 2011ம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை உள்வாங்க உள்ளது இதற்கான புதிய மாணவர் நுழைவு பரீட்சை மூன்று தினங்களில் பிரதேச வாரியாக நடைபெறவுள்ளது . இதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள்ஏப்ரல் மாதம் 4ஆம், 5ஆம், 6 ஆம் திகதிகளில் காலை 08.30 மணி முதல்ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ளன.
நுழைவு பரீட்சை வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 04.04.2011 ஆம் திகதி திங்கட்கிழமையும், தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 05.04.2011 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும், மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 06.04.2011 ஆம் திகதி புதன்கிழமையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
ஏக காலத்தில் மாணவர்கள் .இஸ்லாமிய கற்கைநெறியில் சிறப்புத் தேர்ச்சி, இலங்கை கல்வியியல் பட்டப்படிப்பு, தகவல் தொழில்நுட்ப டிப்ளோமா பாடநெறி ஆகியன போதிக்கப்படுவர் என்பதுடன் ஜாமிஆ நளீமிய்யா சர்வதேச இஸ்லாமிய உலகின் பல்கலைக்கழகங்களது சம்மேளனத்தில் (FUIW) அங்கத்துவத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன் பட்டச்சான்றிதழ் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகங்களினால் அங்கீகரிக் கப்பட்டதாகும் என்பதும் குறிபிடத்தக்கது.
நுழைவுக்கான கல்வி தகமைகளாக குறைந்த பட்சம் க.பொ.த(சா.த) பரீட்சையில் சித்தியடைந்து, க.பொ.த(உ.த) பரீட்சைக்குத் தோற்றுவதற்கான குறைந்த பட்ச தகைமைகளை பெற்றிருத்தல் -இஸ்லாம், கணிதம், தமிழ் ஆகிய பாடங்களில் சித்தியடைந்திருத்தல்- என்பதுடன் தேர்வுக்கு வருபவரின் வயது 31.01.2011 இல் 17 வயதுக்கு மேற்படாதிருத்தல் வேண்டும் என்றும்
நுழைவுத்தேர்வுக்கு வருபவர்கள் பிறப்புச் சாட்சிப்பத்திரம், க.பொ.த(சா.த) பரீட்சைப் பெறுபேறு ஆகிய வற்றின் மூலப்பிரதி ஆகியவற்றுடன் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை, தேக ஆரோக்கியமுள்ளவர் என்பதை நிரூபிப்பதற்கான மருத்துவச் சான்றிதழ் என்பனவற்றை கொண்டுவருதல் வேண்டும் என்றும் மற்றும் ஏனைய ஆவணங்கள், புலமைச் சான்றிதழ்கள் என்பனவும் பரீட்சிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலதிக  தொடர்புகளுக்கு: 0342276338, 0342277112


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்



ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 15வது வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது . ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டதுடன், சிறப்பு பேச்சாளராக ஜாமியா நழீமியா பிரதிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத் கலந்து கொண்டுள்ளார்.
விசேட அதிதிகளாக ஆளுனர் அலவி மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். அஸ்வர், பிரதி அமைச்சர் பஷீர் ஷேகுதாவூத் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளார்.
15வது வருட பொதுக்கூட்டமும் செயற்குழுவிற்கான உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பும் இதன்போது இடம்பெற்றுள்ளது இதன்போது போரத்தின் தலைவராக நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன் தலைவராகவும் தினக்குரல் பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம்.நிலாம் செயலாளராகவும் சுயாதீன ஊடகவியலாளர் முஹம்மட் பாயிஸ் பொருளாளராகவும் ஏகமானதாக தெரிவுசெய்யப்பட்துள்ளனர் அதேவேளை, 15 பேர் கொண்ட நிறைவேற்றுக்குழு தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
NewsLankamuslim

மீள் பதவு: உள்ளூராட்சித் தேர்தல் முறை உத்தேச மாற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் அவசியமானது



‘உள்ளூராட்சித் தேர்தல் முறை உத்தேச மாற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் அவசியமானது’ என்ற S.M.அப்துல்லாஹ் எழுதிய கட்டுரை கடந்த வருடம் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி எமது lankamuslim.org தளத்தில் வெளியானது தற்போதைய தேவை கருதி மீண்டும் இன்று -27.03.2011- மீள் பதிவு செய்யப்படுகின்றது
உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தினால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என முஸ்லிம் அமைப்புகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட்ட பல அமைப்புகள் கடந்த வருடம் 12 மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் அந்த வழக்குகள் இருந்த நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பாராளுமன்றில் கடந்த வருடம் நவம்பர் 16 ஆம் திகதி சபாநாயகர் சமல் ராஜபக்ஷ் தெரிவித்தார்.
பின்னர் உள்ளூராட்சி சபை தேர்தல் திருத்தச் சட்டமூம் இந்த வருடம் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் விவாதம் ஒத்திவைக்கப்பட்டது இந்த ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் திருத்தச் சட்டமூம் மீண்டும் பாராளுமன்றத்தில் விரைவாக கொண்டுவரப்படவுள்ளது என்று தெரிகின்றது இதன் காரணமாக இது தொடர்பான கட்டுரைகள் மீள் பதிவு செய்யப்படுகின்றது.

S.M.அப்துல்லாஹ்
சிறுபான்மை அரசியல் மட்டங்களில் பெரிது விவாதிக்கப்படும் உள்ளூராட்சித் தேர்தல் முறையின் உத்தேச புதிய மாற்றங்கள் அடங்கிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் விரைவில் சமர்பிக்கபடவுள்ளது இது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது இந்த கலந்துரையாடலின் முஸ்லிம் நிறுவனங்கள், இயக்கங்களின் பிரதிநிதிகளையும் ஆர்வமுள்ளவர்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டியது.
ஹோட்டல் ரண்முத்துவில் நடைபெற்றது பலரும் கலந்து கொண்டனர் ஆனால் அங்கு உள்ளூராட்சித் முறையின் உத்தேச புதிய மாற்றங்களை கொண்ட உத்தேச நகல் கிடைக்காமையால் அது கொண்டுள்ள சாதக பாதக மாற்றங்கள் விவாதிக்க முடியாத நிலை காணப்பட்டது அங்கு உரையாற்றிய கொழும்பு பல்கலை கழக அரசியல் துறை விரிவாக பார்க்க விரிவுரையாளர் கலாநிதி N .S .M . அனீஸ் பெரும்பான்மை கட்சிகள் ஆட்சி அமைக்க வேண்டுமானால் சிறுபான்மை கட்சிகளில் தன்கியிருக்கவேண்டும் என்ற நிலையை மாற்றியமைக்கும் நோக்குடன் இந்த உள்ளூராட்சித் முறையின் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாகவும்
இது தொடர்பில் அரசியல் தலைமையும், புத்திஜீவிகளும் இணைந்து செயல்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் மேலும் அவர் இந்த சட்ட மூலம் பெரும்பான்மை கட்சிகள் ஆட்சி அமைக்க வேண்டுமானால் சிறுபான்மை கட்சிகளில் தன்கியிருக்கவேண்டும் என்ற நிலையை மாற்றியமைக்கும் நோக்குடன்தான் கொண்டுவரப் படுகின்றது என்பதை அண்மையில் இந்த சட்ட மூலத்தை வரைந்த பேராசிரியர் ஒருவரே என்னிடம் உறுதிப் படுத்தினார் இன்நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இது பற்றி கவனிப்பாரற்றிருப்பது கவலைக்குரியது என்றும் தெரிவித்தார் என்பதுடன் இந்த கலந்துரையாடல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று அங்கு சுட்டிகாட்டப்பட்டது
இது பற்றி கருத்து தெரிவித்திருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் N.M.அமீன இந்த சட்ட திருத்தத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாதகமான விடையங்கள் இருப்தாக அறிய முடியவில்லை என்றும் உள்ளூராட்சித் மாகாண சபை அமைச்சர் அதாவுல்லாஹ் சிறுபான்மையினர் நலன்கள் தொடர்பில் அக்கறையுடன் செயல்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது என்றும் தெரிவித்திருத்தார் இந்த சட்ட மூலம் தொடர்பான விசேட கலந்துரையாடலில் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்த அமைப்பின் தலைவர் இவ்வாறு தெரிவித்தமை இந்த கலந்துரையாடலின் அடுத்த அமர்வை உடன் கேள்விக்குள்ளாகியது அதே போன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் இந்த சட்ட மூலம் தொடர்பான இரண்டாவது கலந்துரையாடலை ஏற்பாடு செய்யவில்லை என்பது குறிபிடத்தக்கது
இதன் பின்னர் இது தொடர்பான எந்த பொது கலந்துரையாடல்களும் முஸ்லிம் தரப்பில் இடம் பெற்றதாக அறியமுடியவில்லை இந்த சட்டமூலத்தை எதிர்ப்பதாக கூறிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் இந்த சட்டமூலம் கிழக்கு மாகாண சபைக்கு வந்தபோது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை அதன் ஊடாக கிழக்கில் அந்த சட்ட மூலம் வெற்றி பெறுவதற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளது என்றுதான் பார்க்கப்படுகின்றது
இச்சட்ட மூலத்திற்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாக வாக்களித்தது இச்சட்டமூலம் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் மூன்று மாகாண சபை உறுப்பினர்களும் இச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாகவும் அறிவித்தது இதே நிலைப்பாட்தைத்தான் தேசிய காங்கிரசும் எடுத்திருந்தது
உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் மற்றும் உள்ளூர் அதிகார சபைகள் விசேட திருத்தச் சட்ட மூலம் ஆகிய உத்தேச சட்டமூலங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 11 முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்,தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பு போன்றவற்றினால் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன உள்ளூராட்சி தேர்தல் முறை திருத்தசட்ட மூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது
இதேவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பாராளுமன்றில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன இச் சட்ட மூலம் நடைமுறைக்கு வருமானால் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஆபத்துக்கள் குறைவு எனும் வாதம் முன்வைக்கப்பட்டாலும் கூட வடக்குக் கிழக்குக்கு வெளியே சிதறி வாழும் சிறுபான்மை மக்களின் ஒட்டுமொத்த அரசியல் பிரதிநிதித்துவமும் இதன் மூலம் இல்லாதொழிக்கப்படுகிறது என்ற வாதம் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்
உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரச தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார் இன்று அரசுடன் இணைத்து கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த சட்ட மூலம் தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டும்
இந்தச் சட்டமூலத்தின் கீழ் ஓர் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படுமானால் அங்கு தமிழ் பேசும் இனங்களின் பிரதிநிதித்துவம் என்பது குறைவடையும் அதேவேளை, பெரும்பான்மையின பிரதிநிதித்துவம் என்பது கேட்காமலேயே அதிகரிக்கக் கூடிய வாய்ப்பும் உள்ளது இதன் காரணமாக சிறுபான்மையினராக உள்ள மக்கள் ஒன்றில் பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைய வேண்டும். அல்லது தமது தேவைகளுக்காகப் பெரும்பான்மை இனத்தில் தங்கியிருக்க வேண்டும்.
சுருக்கமாகக் கூறப் போனால் இதுதான் உண்மை இதனைத்தான் அரசாங்கம் எதிர்பார்க்கிறது’ என்று விமர்சிக்க படுகின்றதுஇந்த விடையங்கள் தொடர்பில் அரசியல் கட்சிகள் என்பதற்கு அப்பால் முஸ்லிம் சமூகம் பல பொது கலந்துரையாடல்களை நடாத்தவேண்டும் இந்த சாதக பாதக விளைவுகள் ஆராயப்படவேண்டும் முஸ்லிம் சமூகம் இந்த விடையத்தில் கட்சிகளின் நிலைப்பாட்டில் தங்கிருக்கமுடியாது சுயமான ஆய்வுகளை மேட்கொள்ளவேண்டும் என்பது மிகவும் அவசியமானது முஸ்லிம் சமூகம் சார்ந்து இது தொடர்பான கலந்துரையாடல்களை பார்க்கமுடியாத நிலைதான் இன்று காணப்படுகின்றது இந்த ஆரோக்கியமான நிலையாக பார்க்கமுடியாது முஸ்லிம் சமூகம் எத்தனை அமைச்சரவைகளை கொண்டுள்ளது என்பதற்கு அப்பால் எவற்றை முஸ்லிம் சமூகம் சாதிக்கமுடியும் என்பது முக்கியமானது.


Mar 25, 2011

லிபியா மீதான மேற்கின் போர் சிலுவை யுத்தமா ?


M.ஷாமில் முஹம்மட்
 நேட்டோ லிபியா மீதான ஐநாவின் ‘விமான பறப்பு தடையை’ அமுல்படுத்தும் நடவடிக்கைக்கு தலைமை வகிக்க இணங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது. நேட்டோ லிபியா மீதான நடவடிக்கைகளை வழிநடத்தவேண்டும் என்று இத்தாலி, ஜேர்மன், பிரிட்டன், உட்பட பல நாடுகள் வலியுறுத்தி வந்தன பிரான்ஸ் மற்றும் சில நாடுகள் அதை விரும்ப வில்லை என்று செய்திகள் தெரிவித்தன இந்த நிலையில் நேட்டோ பொது செயலாளர் அண்டெர்ஸ் ரஸ்முசென் ‘விமான பறப்பு தடையை’ அமுல்படுத்தும் பொறுப்பை நேட்டோ ஏற்றுகொள்கின்றது என்பதுடன் தற்பாதுகாப்பு கருதிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் மற்ற நடவடிக்கைகள் மேற்கு கூட்டு படையின் கைகளில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் ஆனாலும் இன்னும் நேட்டோ பொறுப்பு ஏற்கவில்லை இன்று அல்லது நாளை பொறுப்பு ஏற்றுகொள்ளும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது

நேட்டோ பொது செயலாளரின் அறிவிப்பில் இரண்டு நடவடிக்கைகள் பற்றி குறிபிடப்பட்டுள்ளதுடன் இரண்டு தலைமைகள் பற்றியும் தெரிவிக்கப்ட்டுள்ளது ஒன்று ‘விமான பறப்பு தடையை’ அமுல்படுத்தும் பொறுப்பை நேட்டோ கையில் எடுக்க , மற்ற நடவடிக்கைகளான ‘ பொது மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும்’   விரிவாக என்ற ஐநா அனுமதியின் கீழ் லிபியா படைகள் மீது வழிந்த தாக்குதல் , தரைப்படை லிபியாவினுள் உள்நுழைந்து தாக்குதல் என்ற பரந்த பொருள் கொண்ட’ பொது மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும்’ என்ற ஐநா அனுமதியை மேற்கு கூட்டு படைகள் மேற்கொள்ளும் என்று விளங்கிக்கொள்ளபடுகின்றது
நேட்டோ உறுப்புநாடான துருக்கி இந்த நேட்டோ நடவடிக்கையாக தரை படையை நேட்டோ அனுப்ப கூடாது என்ற நிபந்தனை உள்ளடங்களாக சில இறுக்கமான நிபந்தனைகளை முன்வைத்துள்ளது அதற்கு சாதகமான நிலைபாட்டை ஜெர்மணியும் எடுத்துள்ளது என்பதால் இரட்டை தலைமை என்ற முடிவுக்கு மேற்கு கூட்டு தலைமை வந்திருக்கலாம். இங்கு மேற்கு நாடுகளுக்கு ஐநாவின் அனுமதி என்பது உலகை ஏமாற்ற இன்று தேவைப்படுவதாக தெரிகின்றது ஆனால் ஈராக்கை தாக்கி ஆக்கிரமிக்கும்போதும் , ஆப்கானை தாக்கி ஆக்கிரமிக்கும்போதும் மேற்கு கூட்டு பயங்கரவாதத்திற்கு இந்த ஐநா அனுமதி அன்று தேவைப்படவில்லை என்பது குறிபிடத்தக்கது.
கடந்த ஆறு இரவுகளாக மேற்கு நாட்டு கூட்டு படைகள் அமெரிக்காவின் வழிகாட்டலில் லிபியா மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றது இந்த இராணுவ நடவடிக்கைக்கு 350 யுத்த விமானங்களும் , 38 யுத்த கப்பல்களும் பயன்படுத்த படுகின்றது யுத்த விமானங்களில் அரைவாசி விமானங்களும் 12 யுத்த கப்பல்களும் அமெரிக்காவுக்கு சொந்தமானது இது வரை ஏவப்பட்ட 170 வரையான ஏவுகணைகளில் பெரும்பாலானவை அமெரிக்காவுக்கு சொந்தமானது தற்போது வரைக்கும் மேற்கொள்ள படும் நடவடிகைகளுக்கு அமெரிக்கா தலைமை வகிக்கின்றது எனினும் அமெரிக்கா இந்த தாக்குதல் நடவடிக்கைகளில் தான் பிரதான வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் நடவடிகைகளுக்கு தேவையான உதவிகளை செய்யவதாகவும் தெரிவித்துள்ளது இந்த நிலையில் தரை படை லிபியாவுக்குள் யாரின் தலைமையில் நுழைவது என்று விவாதங்கள் நடைபெற்று வருகின்றது
லிபியாவின் பல இராணுவ இலக்குகள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது இந்த தாக்குதல்கள் உள்நாட்டில் மக்கள் மத்தியில் கடாபிக்கு அனுதாப பிரிவு ஒன்றை உருவாக்கும் என்றும் மேற்கு , கிழக்கு என்ற சிவில் யுத்த நிலைக்கு வழிவகுக்கும் என்றும் லிபியா என்ற நாடு இரண்டாக பிரிய வழிவகுக்கும் என்று எண்ணுவது தவறாகாது இந்த நிலையில் மேற்கு கூட்டு படைகள் உள்நுழைந்து தாக்குமா? அல்லது கடாபியையும் மட்டுபடுத்தப்பட்ட அதிகாரத்துடன் வைத்துகொண்டு லிபியாவை இரண்டாக பிரித்து வைத்து எண்ணெய் வளமிக்க கிழக்கில் உருவாக்கப்பட்டுள்ள நிர்வாகத்தை முழுமையாக மேற்கு மீது சார்திருக்க செய்யவதன் ஊடாக ஈராக் , ஆப்கான் போன்ற ஒரு நிலையை ஆபிரிக்காவிலும் தோன்ற செய்யுமா என்பது விரைவில் தெரியவரும்
கிழக்கு லிபியாவில் உருவாக்க பட்டு வரும் நிர்வாகம் முழுமையாக மேற்கின் தயாரிப்பாகும் அதன் போராளிகள் சிறு கோத்திரங்களாகவும் தனிநபர்களாகவும் மேற்கு உருவாக்கியுள்ள தலைமையின் கீழ் தற்போது ஒன்று பட்டுள்ளனர் இந்த போராளிகள் , இந்தமக்கள் பக்குவம், அனுபவும், தூர நோக்கு கொண்ட சர்வதேச இஸ்லாமிய இயக்கங்களால் எந்த வகையிலும் பயிற்றப்படாதவர்கள் அங்கு குறிப்பிட்ட இஸ்லாமிய இயக்கங்கள் இருந்தாலும் அவர்களின் செல்வாக்கு பாரிய மக்கள் சமூகத்தை ஒரு திசை நோக்கி வழிகாட்ட போதுமானதாக இல்லை என்றுதான் அறிய முடிகின்றது ஆகவே போராட்டம், ஜிஹாத் என்று திரண்டு நிற்கும் அந்த மக்கள் போராளிகள் மேற்கின் தயாரிப்பான தலைவர்களின் கீழ்தான் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவர்களை யாரும் இலகுவில் ஏமாற்ற முடியும் தமது அரசியல் தேவைகளை நிறைவேற்ற அல்குர்ஆன், அல்ஹதீஸ் ஆகியவற்றை பயன்படுத்திக் கூட இவர்களை விரும்பிய வடிவத்துக்கு வார்த்துகொள்ள முடியும் என்பது மேற்கின் சூழ்ச்சி முறையிலான நடவடிக்கைகளுக்கு களம் இலகுவாக இருப்பதை காட்டுகின்றது. இந்த மாதிரியான இரகசிய நடவடிக்கைகளை ஆப்கானிலும் , பாகிஸ்தானிலும் மேற்கு உலகம் வெற்றிகரமாக செய்துவருகின்றது என்பது நோக்கத்தக்கது
மறுபுறம் கடாபி சிலுவை யுத்தம் லிபியா மீது தொடுக்கப்பட்டுள்ளது சுவர்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது இளம் சமுகமே திரண்டு வா தொழுது முடித்து விட்டாயா ? எடுகையில் ஆயுதத்தை கிறிஸ்தவ சிலுவை யுத்தம் உன் நாட்டின் மீது திணிக்கப்பட்டுள்ளது என்று கூவி போர் பறை கொட்டுகின்றார் மறுபக்கம் கடாபி தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் இராணுவம் கடாபிக்கு கட்டுப்படுவதை உடடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து தாக்குதல் நடத்தப் படுகின்றது இந்த தாக்குதல் எதுவரை ? எவ்வளவு காலத்துக்கு ?, தற்போது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் கடாபியை பலவீனப் படுத்துகின்றதா? என்ற விடை தெரியாத கேள்விகள் எமக்கு இருந்தாலும் மேற்கு கூட்டு படைகளுக்கு அதற்கான தெளிவான விடை இருக்கிறது.
விடையாக முடிவாக மேற்கு கூட்டு தரை படை உள்நுழைந்து தாக்குதல் நடத்தலாம் லிபியாவை ஆக்கிரமிக்கலாம் ஒரு பொம்மை நிர்வாகத்தை ஏற்படுத்தலாம் ஒரு ஈராக்காக ஒரு ஆப்கானாக லிபியாவையும் வைத்துகொள்ளலாம், இறுதியில் இழப்பு முஸ்லிம் உம்மாவுக்கு தான் என்ற கணக்குதான் இங்கும் போடப்படுமா ? என்ற கேள்விகள் இன்னும் கேள்விகளாக மட்டும் இருக்கபோவதில்லை.
2004ஆம் ஆண்டு அமெரிக்க ஜோர்ச் புஷ் நிர்வாகம் லிபியாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை அறிவித்தது இதை தொடர்ந்து கடாபி அணுவாயுத உற்பத்திக்கான முயற்சிகளை கைவிடுவதாகவும் War on Terror நடவடிக்கையில் அமெரிக்காவுடன் முழுமையாக ஒத்துழைப்தாகவும் அறிவித்தார் அதுவரையும் அமெரிக்காவுக்கு கம்யூனிஸ ரஷ்யாவின் ஜோசப் ஸ்டாலினாக தெரிந்த கடாபி அதன் பின்னர் கடாபி மேற்கு நாடுகளுக்கு மைக்கல் கோர்பசேவ்வாக தெரிய தொடங்கினார்.
அத்துடன் கடாபி ஒரு சோஷலிச இடதுசாரி சிந்தை கொண்டவர் எப்போதும் மேற் கு உலகிற்கு எதிரானவர் என்ற தோற்றம் அடிபட்டு போய்விட்டது அதன் பின்னர் மேற்கு உலகம் கடாபியுடன் அனைத்திலும் கைகோர்த்தது முதலாளித்துவ சக்திகளுக்கும் சோஷலிச சக்திகளுக்கும் இடையான போர் லிபியாவில் 2004 ஆம் ஆண்டுடன் முற்று பெற்று விட்டது.
அதை தொடர்ந்து அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளில் எண்ணெய் மற்றும் ஆயுத வர்த்தக கம்பனிகள் லிபியா மீது படையெடுத்தன ஆனால் இதற்கு முன்னரும் லிபியாவுக்கு மிகவும் நெருக்கமான நாடாக இத்தாலி பார்க்கபடுகின்றது இத்தாலியின் எண்ணெய் நிறுவனங்கள் 50 வருடங்களுக்கு மேலாக லிபியாவில் இயங்கிவருவதாக தெரிவிக்கபடுகின்றது இத்தாலியின் பொருளாதார வெற்றிக்கு பின்னால் லிபியாவுடனான உறவு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இத்தாலி லிபியாவின் எண்ணெய் உற்பத்தியில் 38 வீதத்தை ஒபந்த அடிப்படையில் கொள்வனவு செய்கின்றது, லிபியா ஒரு நாளைக்கு 1.45 மில்லியன் பெறல் எண்ணெய்யை உற்பத்தி செய்கின்றது அவற்றை மேற்கு உலகம் தடை இன்றி அனுபவித்து வருகின்றது என்பதும் வெளிப்படையான உண்மை.
இந்த வளங்களை பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தாம் பெற்றுக்கொள்ள முயல்வதாக இத்தாலி அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் எனினும் மேற்கு மேலாதிக்கம் லிபியாவில் வளங்களை கொள்ளையடித்து தமக்குள் பங்கீடு செய்வது என்பதை விடவும் எழுச்சி பெற்றுவரும் இஸ்லாமிய அரசியல் எழுச்சி அலைகளை முறியடிக்கவும் ஆப்கான் , பாகிஸ்தான் போன்ற ஒரு நாட்டை சோமாலியாவுக்கு அடுத்ததாக ஆபிரிக்காவில் உருவாக்கும் தமது நீண்டகால அடிப்படையான திட்டத்துடன்தான் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது துனுசியாவிலும், எகிப்திலும் வெற்றிபெற்றுள்ள மக்கள் ஆர்பாட்டங்கள் மேற்கை அதிர்வடைய செய்துள்ளது அந்த அமைதியான ஆட்சி மாற்றங்கள் மேற்கின் நலன்களுக்கு எதிர்காலத்தில் முற்றுபுள்ளி வைக்கும் என்று மேற்கின் கணக்கு சரியாக இருந்தால் லிபியா கண்டிப்பாக ஆப்கானாக மாறவேண்டும் என்பது அவர்களுக்கு தவிர்கமுடியாத முடிவு.
லிபியாவின் வளங்களை மேற்கு நாடுகள் மட்டுமல்ல சீனாவும், ரஷியாவும் கூட பெற்றுவருகின்றது சீனாவும், ரஷியாவும் பல பில்லியன் பெறுமதியான ஒப்பந்தங்களை செய்துள்ளது சீனாவும் லிபியாவின் எண்ணெய்யை கொள்வனவு செய்கின்றது, ரஷியா 4 பில்லியன் பெறுமதியான வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது சீனா லிபியாவின் எண்ணெயில் 5 வீதம் தொடக்கம் 7 வீதமான எண்ணெய்யை கொள்வனவு செய்கின்றது இது அமெரிக்கா லிபியாவில் இருந்து பெற்று கொள்ளும் எண்ணெக்கு நிகரானது ஆகவே தாக்குதல் படையெடுப்பு ஆகியவற்றின் நோக்கம் வெறும் வளங்கள் மீதான வேட்டையல்ல அதற்கும் மேலாக எதிர்காலத்தில் இஸ்லாம் பிராந்தியத்தில் செல்வாக்கு மிக்க சக்தியாக வளர்ந்து வருவதை தடுக்கும் இரகசிய நோக்கம் கொண்டது இது ஆழமான தெளிவான இலக்கு மற்றும் திட்ட அடிப்படைகளை கொண்டது என்றுதான் விளங்கிக்கொள்ள முடிகின்றது .
லிபியாவின் வளங்கள் சவூதியை விடவும் மலிவாக கிடைக்கும்போது அதை ஆக்கிரமிப்பது பெற்றுகொள்ளவேண்டிய தேவைகள் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது காலம் எமக்கு இவற்றை தெளிவு படுத்தும்- லிபியா மீதான மேற்கின் போர் சிலுவை யுத்தமா ? காலம் பதில் சொல்லும்.
குறிப்பு
இங்கு இன்னொரு விடயம் சுட்டிகாட்டப் படவேண்டும் டாக்டர் யூசுப் அல் கர்ழாவி லிபியா மீது மேற்கு நாடுகளின் கூட்டு தாக்குதல் சர்வாதிகாரி கடாபி தெரிவித்தது போன்று சிலுவை யுத்தம் அல்ல என்று தெரிவித்துள்ளமை மேற்கு நாடுகளின் ஆரம்ப குண்டு வீச்சுகளின் போது சொன்னவை என்பது குறிபிடத்தக்கது சர்வாதிகாரி கடாபி மக்களை படுபயங்கரமான முறையில் ஒடுக்க படைகளை ஏவி இருந்தார் பெங்காசியில் ஒவ்வொரு வீடு வீடாக எனது படை வரும் இறக்கம் காட்டாது கடுமையாக நடந்து கொள்ளும் என்று கொக்கரித்தார்.
அந்த வேளையில் மக்கள் அதிர்ந்து போய் இருந்தனர் என்பதும் ஐநா வின் மக்களை பாதுகாக்க அணைத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதியை வழங்கியது அதன்போது லிபியாவின் மக்கள் வீதிக்கு இறங்கி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள் என்பது குறிபிடதக்கது எனது கட்டுடையை பெரும் மதிப்புக்குரிய அறிஞ்ஞர் டாக்டர் யூசுப் அல் கர்ழாவியின் கருத்துடன் முரண்படுவதாக எடுத்து கொள்ளவேண்டாம்

லிபியா மீதான தாக்குதல்களுக்கு இரட்டை தலைமை ?


நேட்டோ லிபியா மீதான ஐநாவின் ‘விமான பறப்பு தடையை’ அமுல்படுத்தும் நடவடிக்கைக்கு தலைமை வகிக்க இணங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள்  தெரிவிக்கின்றது. நேட்டோ லிபியா மீதான நடவடிக்கைகளை வழிநடத்தவேண்டும் என்று இத்தாலி , பிரிட்டன், உட்பட பல நாடுகள் வலியுறுத்தி வந்தன பிரான்ஸ் மற்றும் சில நாடுகள் அதை விரும்ப வில்லை என்று செய்திகள் தெரிவித்தன இந்த நிலையில் நேட்டோ பொது செயலாளர் அண்டெர்ஸ் ரஸ்முசென் ‘விமான பறப்பு தடையை’ அமுல்படுத்தும் பொறுப்பை நேட்டோ ஏற்றுகொள்கின்றது என்பதுடன் தற்பாதுகாப்பு கருதிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் மற்ற நடவடிக்கைகள் மேற்கு கூட்டு படையின் கைகளில் இருக்கும் என்றும்  தெரிவித்துள்ளார்.
அதாவது இரண்டு தலைமைகள்,  ஒன்று ‘விமான பறப்பு தடையை’ அமுல்படுத்தும் பொறுப்பை நேட்டோ கையில் எடுக்க , மற்ற நடவடிக்கைகளான ‘ பொது மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ‘ என்ற ஐநா அனுமதியின் கீழ் லிபியா படைகள் மீது வழிந்த தாக்குதல் , தரைப்படை லிபியாவினுள் உள்நுழைந்து தாக்குதல் என்ற பரந்த பொருள் கொண்ட ‘ பொது மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ‘ என்ற தீர்மானத்தை மேற்கு கூட்டு படைகள் மேற்கொள்ளும் என்று விளங்கிக்கொள்ளபடுகின்றது விரிவாக
நேட்டோ உறுப்புநாடான துருக்கி இந்த நேட்டோ நடவடிக்கையாக  தரை படை யை நேட்டோ அனுப்ப கூடாது என்ற நிபந்தனை உள்ளடங்களாக சில இறுக்கமான    நிபந்தனைகளை  முன்வைத்துள்ளது என்பதால் இரட்டை தலைமை என்ற முடிவுக்கு மேற்கு கூட்டு தலைமை வந்திருக்கலாம்.
கடந்த ஆறு இரவுகளாக மேற்கு நாட்டு கூட்டு படைகள் லிபியா மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றது இந்த இராணுவ நடவடிக்கைக்கு 350 யுத்த விமானங்களும் , 38 யுத்த கப்பல்களும் பயன்படுத்த படுகின்றது யுத்த விமானங்களில் அரைவாசி விமானங்களும் 12 யுத்த கப்பல்களும் அமெரிக்காவுக்கு சொந்தமானது எனினும் அமெரிக்கா இந்த தாக்குதல் நடவடிக்கைகளில் தான் பிரதான வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் நடவடிகைகளுக்கு தேவையான உதவிகளை செய்யவதாகவும் தெரிவித்துள்ளது
இந்த நிலையில் நேற்று பிரான்ஸ்  பறந்து இறங்கிய லிபிய விமானம் ஒன்றை தாக்கி அழித்துள்ளது அது அல்லாமல் லிபியாவின் பல இராணுவ இலக்குகள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது இந்த தாக்குதல்கள் உள்நாட்டில் மக்கள் மத்தியில் கடாபிக்கு அனுதாப பிரிவு ஒன்றை உருவாக்கும் என்றும்  மேற்கு , கிழக்கு என்ற சிவில் யுத்த நிலைக்கு வழிவகுக்கும் என்றும் லிபியா என்ற நாடு இரண்டாக பிரிய வழிவகுக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடாபி தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் இராணுவம் கடாபிக்கு கட்டுப்படுவதை உடடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து தாக்குதல் நடத்தப் படுகின்றது இந்த தாக்குதல் எதுவரை ? எவ்வளவு காலத்துக்கு ?, தற்போது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் கடாபியை பலவீனப் படுத்துகின்றதா?  என்ற விடை தெரியாத கேள்வி எமக்கு இருந்தாலும் மேற்கு கூட்டு படைகளுக்கு அதற்கான தெளிவான விடை இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும் விடையாக முடிவாக மேற்கு கூட்டு தரை படை உள்நுழைந்து தாக்குதல் நடத்தலாம் லிபியாவை ஆக்கிரமிக்கலாம் ஒரு பொம்மை நிர்வாகத்தை ஏற்படுத்தலாம் ஒரு ஈராக்காக ஒரு ஆப்கானாக லிபியாவையும் வைத்துகொள்ளலாம், இறுதியில் இழப்பு முஸ்லிம் உம்மாவுக்கு தான் என்ற கணக்குதான் இங்கும் போடப்படுமா ?

கொழும்பு 5 உள்ளூராட்சி சபைகளை உள்ளக்கிய மெட்றோ பொலிட்டன் சிட்டி கோப்ரேசன் !



ஐந்து உள்ளூராட்சி சபைகளை உள்ளடக்கி கொழும்பு ‘மெட்றோ பொலிட்டன் சிட்டி கோப்ரேசன்’  என்ற நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு மாநகர சபை, தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை, கொலன்னாவ நகர சபை, கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகளையும் உள்ளடக்கி இந்த சிட்டி கோப் ரேசனை அமை ப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்து ள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற் கான வாராந்த ஊடகவியலாளர் மாநாடு சுற்றாடல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்படி தகவல்களைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், இந்த ஐந்து உள்ளூராட்சி சபைகளையும் உள்ளடக்கி கொழும்பு மெற்றோபொலிட்டன் சிட்டி கோப்ரேசன் என்ற ஸ்தாபனத்தை அமைக்கும் யோசனையை உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அவரது யோசனைக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியது.
தலைநகரான கொழும்பின் நிர்வாகத்தையும் ஏனைய நகர அபிவிருத்தி நிலையங்களுக்கிடையில் பலம் மிக்க ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு தான் இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்படவிருக்கின்றது. இதன் மூலம், அந்நிறுவனங்களுக்கு சிறந்த வழிகாட்டல்களை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்புதிய நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும் தற்போது கொழும்பு பிரதேசத்தில் செயற்படுகின்ற உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது,
இப்புதிய நிறுவனத்திற்கு சகல அதிகாரங்களையும் கொண்ட தலைவராக நகர ஆளுனர் ஒருவர் ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்படுவார். என்றாலும் இந்த நிறுவனத்திற்குள் உள்ளடக்கப்படுகின்ற உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், பிரதித் தலைவர்கள், எதிர்க் கட்சியினால் நியமிக்கப்படும் ஒருவர் ஆகியோர் இப்புதிய நிறுவனத்தில் அங்கம் வகிப்பார்கள்.
மேலும் இந்த உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களில் இருந்து தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளை உள்ளடக்கி 12 ஆலோசனைக்குழுக்களும் உள்ளூராட்சி கமிட்டி ஒன்றும் இப்புதிய நிறுவனத்திற்காக நியமிக்கப்படவுள்ளது.
இப்புதிய நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை வரைவதற்கான பொறுப்பு சட்ட வரைஞர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலும், அதனை அண்டிய பிரதேசங்களிலும் சனத் தொகை அதிகரித்துள்ளது. இவ்வதிகரிப்புக்கு ஏற்ப சேவை வழங்க முடியாத நிலைக்கு இந்த உள்ளூராட்சி சபைகள் முகம் கொடுத்துள்ளன. இந்தப் பிரதேசங்களில் கழிவுப் பொருட்களை தொடராகவும் சீராகவும் முகாமைப்படுத்த முடியாத நிலையையும் இச்சபைகள் எதிர்கொண்டுள் ளன.
இந்த உள்ளூராட்சி சபைகள் எதிர்நோக்கி வருகின்ற நெருக்கடிகளைத் தீர்த்துவைத்து இங்கு வாழுகின்ற மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கவே இப்புதிய நிறுவனத்தை ஸ்தாபிக்க இந்நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றோம்.
கொழும்பு மேற்றோ பொலிட்டன் சிட்டி கோப்ரேசன் அமைக்கப்படுவதால் இதனுள் உள்ளடக்கப்படுகின்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்கப்படமாட்டாது. உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியசேன அத்துகலவும் கலந்து கொண்டார்.- மர்லின் மரிக்கார் தினகரன்


Mar 24, 2011

நான்கு நாட்களில் இஸ்ரேல் 10 பேரை கொன்று 43 பேரை படுகாயப்படுத்தியுள்ளது !!


இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை பலஸ்தீன காஸா மீது  விமான மற்றும் மோட்டார் குண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றது கடந்த நான்கு  நாட்களில் 17  விமான தாக்குதல்களையும்   60 வதுக்கும் அதிகமான மோட்டார் குண்டு தாக்குதல்களையும்  நடத்தியுள்ளது இந்த  தாக்குதல்களில் 10 பேர் கொல்லபட்டுள்ளனர்  43 பேர் படுகாயமடைந்துள்ளனர்- இனாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்-
இவர்களின் பலரின் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக காஸா வைத்தியசாலை அதிகாரி தெரிவித்துள்ளார்  இவர்கள் அனைவரும் இந்த மார்ச் மாதம் 20 திகதி தொடக்கம் மார்ச் மாதம் 23 ஆம் திகதி வரை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை நடாத்திய கண்முடித்தனமான தாக்குதல்களில் கொல்லபட்டுள்ளனர்
கொல்லபட்டுள்ள 10 பேரில் ஐவர்  சிறுவர்களாகும் படுகாயமடைந்துள்ளவர்களில் 15 பேர் சிறுவர் சிறுமியராகும் என்று  காஸா அவசர சிகிச்சை பிரிவின் பேச்சாளர் அத்ஹம்   அபூ  சமியாஹ்  தெரிவித்துள்ளார் என்று பலஸ்தீன் தகவல் மையம் தெரிவித்துள்ளது அதேவேளை எகிப்து இராணுவம் காஸா மீதான தாக்குதல்கள் தொடர்பாக இஸ்ரேலை எச்சரித்துள்ளது.

ஒரு குற்றவாளி பல பயங்கரவாதிகளால் தாக்கப்படுகின்றான்



லிபியா மீது மேற்கின் தாக்குதல்கள் தொடர்கின்றது லிபியா மக்களின் போராட்டத்தை ஆதரித்துள்ள  இஸ்லாமிய இயக்கங்கள், நிறுவனங்கள் என்பன மேற்குலகம் இராணுவ ரீதியில் லிபியா மீது தலையிடுவதை பெரும்பாலும் ஏற்று கொள்ளவில்லை அதற்கு பிரதான காரணமாக மேற்கின்  நிகழ்கால, கடந்த கால வரலாறு அமைந்துள்ளது மேற்கு  லிபியாவின் மக்களை பாதுகாக்க களம் இறங்கியுள்ளதாக எந்த ஒரு சாதாரண சர்வதேச பார்வை கொண்ட மனிதனும்  ஏற்றுகொள்ள தயாரில்லை அந்த அளவுக்கு மோசமான நடத்தையை கொண்டதுதான் இந்த மேற்கு நாடுகள் கடாபி கொலைகாரன் குற்றவாளி என்று கூறும் மக்கள் மேற்கின் இராணுவ நடவடிக்கையை குற்றவாளி மீது பயங்கரவாதிகள் செய்யும் தாக்குதலாகத்தான்  பார்க்கின்றனர்
மேற்கு எப்போதும் அடுத்த நாட்டு மக்களின் நலன் என்பதை விட தனது தேசிய, பிராந்திய நலன்களை பாதுகாப்பதில் தான் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளது 1980 களில் ஈரானையும் ஈராக்கையும் மோதவிட்ட இவர்கள் இரு நாடுகளுக்கும் தேவையான ஆயுதங்களை வழங்கிவந்துள்ளனர் விரிவாக துனூசியாவிலும், எகிப்திலும், யெமனிலும், லிபியாவிலும், பாகிஸ்தானிலும் மக்களை அடக்கி வந்த சர்வாதிகாரிகளுக்கு தமது நாடுகளில் நலனை பேணுவதற்காக அவர்களை ஆதரித்தும் அவர்களுக்கு தேவையான ஆயுதங்கை வழங்கியும் வந்துள்ளனர் இன்று லிபியா மீது நடத்தப்படும் தாக்குதல்களும் ஒட்டுமொத்த மேற்கின் நலன் கருதியதுதான் என்பதை  எவரும் இலகுவாக விளங்கி கொள்வர்.
கடாபி ஒரு சோஷலிச சர்வாதிகாரி , இஸ்லாமிய அரசியல் பேசிய மனிதர்களை கொன்று குவித்த கொலைகாரன் என்று அறியப்பட்டவர் இன்று லிபியா மீது சிலுவை யுத்தம் திணிக்கப்பட்டுள்ளது அனைத்து இஸ்லாமிய வாதிகளும் அணிதிரளுங்கள் ஜிஹாத் உங்களை அழைக்கின்றது சுவர்க்கம் உங்களுக்காக காத்திருக்கின்றது என்று மக்களை ஏமாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்  இந்த கூற்றை யூசுப் அல் கர்ழாவி இது  சிலுவை யுத்தம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
துருக்கி மேற்கின் இராணுவ நடவடிக்கையை வரவேற்கவில்லை என்று தெரிவித்துள்ளதுடன் நின்று கொண்டது எந்த முஸ்லிம் நாடுகளும் லிபியாவின் மக்களுக்கு உதவ முன்வரவில்லை பலமான அரபு முஸ்லிம் நாடு லிபியாவின் விடையத்தில் தலையிட்டால் மேற்கின் தலையிடு  தவிர்க்க முடியுமானதாக இருக்கும் என்று ஹிஸ்புத் தஹ்ரீர் தெரிவித்து வருகின்றது ஆனால் மேற்கு வழமைபோல் தனது வேலையில் மிகவும் கவனமாக காய் நகர்த்துகின்றது தாக்குதல் தொடங்கியதில் இருந்து இன்று வரை 162 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளது 300 தடவைகள் யுத்த விமானங்கள  லிபியா மீது தாக்குதல் நடத்தியுள்ளது அவை எத்தணை குண்டுகளை போட்டுள்ளது என்று அறிவிக்கபடவில்லை பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கடாபி நிர்வாகம் கூறுகின்றது மேற்கின் தாக்குதல்கள் தொடர்கின்றது எதுவரை ? எவ்வளவு காலத்துக்கு ? என்பன அறியப்படாத விடயமாக இருக்கிறது.
இதற்கிடையில் லிபியாவின் கிழக்கு பிரதேசத்தில் உள்ள போராளிகள் இடைகால அரசு ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்    இதன் பிரதமராக மஹ்மூத்  ஜிப்ரி என்ற மேற்கு நாடுகளுக்கு மிகவும் தேவையான மனிதர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது தாக்குதல்கள் தொடர்கின்றது ஒரு பெரும் குற்றவாளி பல பயங்கரவாதிகளினால் தாக்கப்படுகின்றான்   மீண்டும் மேற்கு முஸ்லிம் உலகை தனது கட்டுப்பாட்டில் வைக்க தேவையான  வெற்றிகளை பெற்றுவருகின்றது.
எம்மை ஈராக்கில் கொல்கின்றவர்கள், ஆப்கானிஸ்தானில் எம்மை அழிப்பவர்கள், இஸ்ரேலுக்கு எதிராக எமக்கு எந்த உதவியும் செய்யாதவர்கள் , என்றும் இஸ்ரேலுக்கு பக்க துணையாக இருப்பவர்கள்  இன்று லிபியாவிலும் தாக்குதல் நடத்துகின்றனர் தாக்கபடுவது ஒரு சர்வாதிகாரியாக இருந்தாலும் தண்டிப்பவர்கள் நீங்களாக இருக்ககூடாது என்றுதான் இன்று முஸ்லிம் வாலிபர்கள் நினைக்கின்றனர் மேற்கு தனது தேசத்தின், பிராந்தியத்தின் நலன் பேணும் பல அவதாரங்களை எடுத்து வருகின்றது

மாற்றம் தேடும் உரிமைகள்- வீடியோ கவிதை




பெண் உரிமை பற்றிய ‘மாற்றம் தேடும் உரிமைகள்’ என்ற தலைப்பிலான ஹாரூன் மூஸா எழுதிய புதுக் கவிதை இங்கு பதிவு செய்யபடுகின்றது பெண் உரிமை என்றால் என்ன அரைகுறை உடை அணிவதும், நகங்களுக்கும், உதடுகளுக்கும், தலை முடிக்கும் சாயம் பூசுவதும், குட்டை பாவாடையுடன் குதி உயர்ந்த பாதணிகளை அணிந்து துள்ளி துள்ளி நடப்பதும், மாலையில் கிளப்களுக்கு செல்வதும், கண்டவருடன் கட்டுபாடற்ற பாலியல் உறவு கொள்ளவதும், இறுதியில் சீரழிந்து தான் உருவாக்கும் சந்ததிகளையும் சிரழிந்து போவதும்தான் சுதந்திரம் , உரிமை என்று மேற்கு போதிக்கின்றது இஸ்லாம் ஆணும் பெண்ணும் மனித சமூகம் என்ற பறவையின் இரு இறக்கைகள் என்று போதிக்கின்றது
இஸ்லாம் 7 ஆம் நூற்றாண்டில் , 1420 ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுக்கும் சம உரிமைகளும், பொறுப்புகளும் உண்டு என சட்டமியற்றி பெண்ணுக்கு அவர்களின் உரிமைகளை வழங்கி பலமான சமூகம் ஒன்றையும் உருவாக்கி காட்டியது ஆனால் மேற்குலகில் 17 ஆம் நூற்றாண்டில்தான், 400 வருடங்களுக்கு முன்னர் தான் பெண்ணுக்கும் உயிர் உண்டா? என்ற விவாதம் நடத்தவே தொடங்கினார்கள் அதற்கு முன்னர் பெண்கள் மனித இனமே அல்ல அவர்கள் பிசாசுகளின் வாரிசுகள் என்றார்கள்
ஆனால் இஸ்லாம் 1420 ஆண்டுகளுக்கு முன்பே இயற்கைக்கு மாற்றம் இல்லாத வகையில் ஆணும் பெண்ணும் சம உரிமை உடையவர்கள் என்றது இஸ்லாமிய கோட்பாட்டில் எல்லா தினங்களும் பெண்கள் தினம்தான் , எல்லா தினங்களும் முதியவர் தினங்கள்தான்
இஸ்லாத்தை சமூக வழக்காறுகளையும், மூட நம்பிக்கைகளையும் புறம் தள்ளி தூய இஸ்லாத்தை மட்டும் பின்பற்றும் சமூகங்களில் முதியோர் இல்லங்களையும், பெண் அடிமைத்தனதையும் காணமுடியாது இங்கு இஸ்லாம் கொள்கைப்படுத்தும் கருத்துகள் அனைவரையும் உண்மையான மகிழ்ச்சியல் வைத்துகொள்ளும். உரிமைகள் தொடர்பான  ஒரு அல் குர்ஆன் வசனம்
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (04:01)
மனித சமூகம் இஸ்லாத்தை சரியாக விளங்க முற்படுகின்றது முஸ்லிம் சமூகம் அதன் அடிப்படைகள் நோக்கி வேகமாக வந்து கொண்டிருகின்றது இஸ்லாம்தான் முழு மனித சமூகத்துக்குமான உண்மையான விடுதலையை, சுதந்திரத்தை, உரிமையை கொள்கைப்படுத்தியுள்ளது  அது சரியாக அமுல்படுத்தப்படும் சமூகங்களில் அதை மனிதர்கள் அனுபவிப்பர்.
இனி கவிதையை கவனியுங்கள்:

المشاركات الشائعة